2016-11-02-02-56-49

திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன நுழைவுச்சீட்டுகள், சென்னையில் உள்ள இரு அஞ்சலகங்களில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…
திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை சென்னை தியாகராய நகர், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி செவ்வாய்க் கிழமை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்த சேவையை வழங்குவதாகவும், இதன் படி, ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை இந்த இரு அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலம் நுழைவுச்சீட்டு பெற விரும்புவோர் அதற்காக 56 நாட்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஒரு நுழைவுச்சீட்டில் அதிகபட்சம் 6 பேரை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பயணிகள் குழுவைச் சேர்ந்தவர் களில் யாரேனும் ஒரு நபர் நேரில் வந்து, நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். புகைப்படங் களை தரவேற்றம் செய்து அவர் களுக்கு பார்கோடு பதியப்பட்ட நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் வழங்கப்படும். கூடுதல் லட்டு தேவைப்படுவோர், ஒரு லட்டுக்கு ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ள லாம்.
காலை 10, 11, நண்பகல் 12, பகல் 1 மணி ஆகிய நேரங் களில் தரிசனம் செய்ய வசதியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *