2016-10-23-13-07-56

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
அந்தவகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோயிலில் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அக்டோபர் 26 ஆம்தேதி சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோயிலுக்கு செல்லும் அவர், அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *