2016-07-24-11-43-39

திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை-ஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ரயில் நிலைத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பல விரிவாக்கப் பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக திருப்பதி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு இலவச வை- ஃபை சேவையை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கி உள்ளது.
இதனை, நெல்லூரிலிருந்து காணொலிக் காட்சி மூலம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சித்தூர் எம்.பி. சிவ பிரசாத், திருப்பதி எம்எல்ஏ சுகுணம்மா ஆகியோர் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *