சென்னை கேளம்பாக்கம் – வண்டலூர் இடையே செல்லும் சாலையில் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள கஜகிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்.108 படிக்கட்டுகள் ஏறி மலை மீது சென்றவுடன். அங்கே கருணையே வடிவாக அருள் புரியும் வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம், ஏழு சனிக்கிழமைகள் வீர ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சூடி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, மேலும் பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வீர ஆஞ்சநேயரை பக்தியுடன் வழிபட்டு கஜகிரி மலையை கிரிவலம் வந்தால் வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்