உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து, 10 கிமீ தொலைவில் பிரசித்தி பெற்ற சாரநாத் நகரம் உள்ளது, புத்தபிரான் ஞானம் அடைந்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு போதித்த தனது முதல் போதனை தர்மம் என்பதை இவ்விடத்தில் உள்ள மான் பூங்காவில்தான் உரைத்தார்.
மேலும் தொன்மை வாய்ந்த பௌத்த சமய தளங்களும், கௌதம புத்தர் ஸ்தாபனம் செய்த சௌகந்தி ஸ்தூபி, அசோக தூண் ஆகியவையும் இங்கு உள்ளன. ஆண்டுதோறும் புத்த பூர்ணிமா விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்