இறைவனை வணங்குவதற்காக கோவிலுக்கு செல்லும் நம்மில் சிலர் கருவறை நோக்கி சென்றதும் உள்ளிருக்கும் இறைவனுக்கு நடக்கும் வழிபாடுகளை கண் குளிர பார்க்காமல், கண்களை மூடிக்கொண்டு இரு கரம் கூப்பி வணங்குவது முறையல்ல" நம் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதனை இறைவனை உற்று நோக்கி வணங்கியவரே" மனதுக்குள் வேண்டியவாறு முன் வைக்க வேண்டும், அதன் மற்ற பரிவார தெய்வங்களை வணங்கி விட்டு சிறிது நேரம் கோவிலுக்குள் அமைதியாக கண்களை மூடி தியானிக்க வேண்டும், இப்படி செய்தால் நம்மிடம் உள்ள மகாலட்சுமி அங்கேயே" தங்கி விடுவாள் என்ற தவறான எண்ணத்தின் காரணமாக வழிபாடு முடிந்த உடன் கோவிலை விட்டு வெளியேறுவது மிக மிக தவறு" பெருமாள் கோவிலாக இருந்தால் திவ்ய பிரபந்தம், அல்லது நாராயண நாமத்தை துதிக்க வேண்டும், சிவபெருமான் கோவிலாக இருந்தால் தேவாரம், திருவாசகம் அல்லது ஓம் நமச்சிவாய" ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும், இதன் மூலம், அங்கு நிலவும் அமைதியான சூழல் நம் மனதை ஒருமைப் படுத்தி துன்பங்களை மறக்க செய்து மனம் அமைதி அடைகிறது. அங்கு ஒலிக்கும் மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் நமது மனதை தெளிவுபடுத்துவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது. இதன் மூலம் தெளிவான வாழ்க்கை பாதை நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்