சோழ நாட்டில் சாத்தமங்கையில், திருநீலநக்க என்ற சிவ அடியார் வாழ்ந்து வந்தார். பரமன் மீது பக்தி கொண்ட அவர், ஒரு நாள் தனது துணைவியார் மங்கையர்க்கரசியுடன்' திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீ அயவந்தீஸ்வரரை வணங்குவதற்காக கோவிலுக்கு சென்று, அங்கு மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுக் கொண்டிருந்தபோது, சிவலிங்கத்தின் மீது சிலந்தி ஒன்று ஊர்ந்து வருவதை மங்கையர்க்கரசியார். கவனித்தார் ஈசன் திருமேனியில் ‘ சிலந்தியா ?. அதை அகற்ற வேண்டும்’ என்ற எண்ணத்துடன். தனது வாயால் அதை ஊதினார். ஆனால்" சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை.
இதனால் மீண்டும் மீண்டும் வாயால் ஊதியபடி சிலந்தியை விரட்ட முயற்சி செய்தார். அப்போது அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த திருநீலநக்கர் என்ன ஆணவம் உனக்கு" எச்சிலை ஈசன் மீது தெறிக்க விடுவாய், உன் எச்சில் இறைவன் மீது விழுந்து விட்டது. இந்த செயல் ஆகமத்திற்கு எதிரானது, நீ தெய்வத்தை அவமதித்து விட்டாய்" என்று மங்கையர்கரசியாரை கடுமையாக கண்டித்து விட்டு, கோபத்தில் அவரை அங்கேயே' விட்டு விட்டு, தான் மட்டும் புறப்பட்டு சென்று விட்டார். மங்கையர்கரசியோ, கணவனின் கோபத்திற்கு ஆளானதை எண்ணி' ஆலயத்தின் நூல், அமர்ந்து இறைவனை வழிபட்டார். ஈசனே" நான் செய்தது பெரும் பிழை என்றால், கருணை கொண்டு' என்னை மன்னித்து விடு. என் கணவன். என்னை விட்டு விலகும் படி செய்து விடாதே” என இறைவனே" சரணா கதி என அவன் திருவடியில் பணிந்து கிடந்தார். அன்றிரவு திருநீலநக்கர் கனவில் தோன்றிய ஈசன்' திருநீலநக்கரே " உம் துணைவி எம்மிடம் தாயின் கருணையோடு, நடந்து கொண்டார். அவர் மீது பிழை ஏதுமில்லை' பொழுது விடிந்ததும் கோவிலுக்கு, வந்து என் திருமேனியை பார்" என்றார்.
உறக்கம் களைந்து கண் வீழ்த்த திருநீலநக்கர். சேவல் கூவி" கதிரவன் தோன்றும் முன் , பதற்றத்துடன் கோவிலுக்கு ஓடி சென்று பார்த்தபோது. கருவறையில் இருந்த இறைவனின் லிங்க திருமேனியில் மங்கையர்கரசியாரின், எச்சில்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் சிலந்திக் கடித்துப் புண்ணாகிய சிவபெருமானின் சுயம்பு திரு மேனியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஈசனுக்கு நேர்ந்த கதியை நினைத்து கண்ணீர் விட்டு கதறினார். இறைவா அடியேன் அறியாது செய்த தவறை மன்னித்து அருளுங்கள்" என பணிந்து நின்றார். அப்போது சிலந்தி கடித்த காயம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்த லிங்கத் திருமேனியிலிருந்து ஜோதி வடிவில் எழுந்தருளிய சிவபெருமான் முன் திருநீலநக்கரும்- மங்கையர்கரசியாரும் திருவடியில் விழுந்து வணங்கினர்.
மங்கையர்கரசியை தனது தாயாக ஈசனே" ஏற்றுக்கொண்டதை எண்ணி மனம் மகிழ்ந்து. மங்கையர்கரசியாரை மீண்டும் அழைத்துக் கொண்டு இருப்பிடம் சென்றார்.இவ்நிகழ்வுக்கு பின் சிவபெருமானுக்கு தொண்டுபுரிவதும் அடியாருக்கு பணி செய்வதை பாக்கியமாக அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் துணைவியா மங்கையர்கரசியாரும் செய்து கைலாய நாதன் கரம் பற்றி பிறப்பில்லா நிலை அடைந்தனர்.
பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சிஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே."
திருநீலக்க நாயனார்-மங்கையர்க்கரசியார் வணங்கிய அருள்மிகு ஸ்ரீ அயவந்தீஸ்வரர் திருக்கோவில், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட சீயாத்த மங்கை கிராமத்தில் உள்ளது. திருஞானசம்பந்தர் இவரை வழிபட்டு' ; மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை’ என பதிகம் பாடினார். இங்கு ஈசனுக்கு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற திருப்பெயரும், அன்னை அருள்மிகு ஸ்ரீ இருமலர்கண்ணியம்மை, உபயபுஷ்ப விலோசினி என்றும் அழைக்கப்படுகிறாள். கிழக்கே புனித சூரிய தீர்த்தமும்,(அக்கினி தீர்த்தம்) மேற்கே சந்திர தீர்த்தமும்,(குளிர்ந்த திருத்தம்) இத்திருகுளத்தில் புனித நீராடி. காலை சூரிய உதயத்திற்கு பின், மாலை சந்திர ஊதியத்திற்கு பின்னும் ஏழு பௌர்ணமிகள் தொடர்ந்து இறைவனை வழிபட்டால், திருமண தடை நீங்கும், குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்படும், பிள்ளை பேரு பாக்கியம் உண்டாகும், செல்வம் செழிக்கும், என்பது நம்பிக்கை, இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர் கரசி அம்மையார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகப் பெருமான், ஆகியோரும் உள்ளனர். இறைவன் சன்னதியில் ஐந்து நிலை ராஜகோபுரம், அம்பிகை சன்னதி முன் இரண்டு நிலை கோபுரமும் அடியார்களை இன்முகத்துடன் வரவேற்கிறது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்