தெலுங்கானா மாநிலம், தட்கமல்லா கிராமம், வாரங்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி தேவி திருக்கோவில் உள்ளது. ஏரிக்கரையின் ஓரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலானது, கி.பி 625 இல் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்கு வழிபாட்டிற்குரிய தெய்வமான அன்னை ஸ்ரீ பத்ரகாளி தேவி, அமர்ந்த நிலையில் எட்டு கரங்களுடன்' ஒவ்வொரு கரத்திலும், ஒரு ஆயுதத்தை ஏந்தியவாறு' சுமார் 2.7 மீட்டர் உயரத்தில் காட்சி அளிக்கிறாள்.
எதிரே சிம்ம வாகனமும், சிவபெருமான், ஹனுமான், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி மற்றும் நவகிரக சன்னதியும் உள்புறத்தில் அமைந்துள்ளது, வெளிப்புறத்தில் விக்னேஸ்வரர் அருள் பாவிக்கிறார். காகதீய மன்னர்களின் குலதெய்வமான பத்ரகாளி தேவி மிகவும், சக்தி வாய்ந்தவள் என நம்பப்படுகிறது.
ஆண்டுதோறும், ஏப்ரல் அல்லது மே மாதம் பிரம்ம உற்சவம், ஆகஸ்ட்,- செப்டம்பர் மாதம், வசந்த நவராத்திரி, ஷாகம்பரி உற்சவம் மற்றும் சரண் நவராத்திரி போன்ற முக்கிய விழாக்களும் இங்கு நடைபெறுகிறது. வாரங்கல் பத்ரகாளி தேவியை, காலை 5:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்