சிவபெருமான் கை சின்னத்துடன் காட்சியளிக்கும் அதிசய கோவில்

Written by

in

அகத்தியமா முனிவரின் பிரம்மாதி தோஷமும், இந்திரனின் சாபமும் நீக்கி ஈசன் காட்சி அளித்ததும், சீனிவாச பெருமாள் சுயம்புவாக தோன்றிய சிவ கோவிலின் வரலாற்றை அறிவோம் வாருங்கள்.   ஒருமுறை கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.   அப்போது அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது காமம் கொண்டு, அகலிகையை அடைய நினைத்து  இந்திரன் சூழ்ச்சி செய்து. அதிகாலையில் நதிக்கரைக்கு சென்று நீராடும் வழக்கமுடைய  கௌதம முனிவரை விடியும் முன்னரே"  சேவலாக மாறி இந்திரன் முனிவரை நதிக்கரைக்கு நீராட போகச் செய்தான்….

பின் கௌதம முனிவரின் உருவெடுத்து  இந்திரன் அகலிகையுடன்  சேர்ந்து இன்புட்ரான். பொழுது விடியாததை உணர்ந்து நதிக்கரை நோக்கிச் சென்ற கௌதம முனிவர் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தபோது,  இந்திரனின் இழுச் செயலை கண்டு கோபம் அடைந்து இந்திரனுக்கு கௌதம முனிவர் சாபம் விட்டார். அப்போது முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இந்திரன் சிவனை நோக்கி தவம் இருந்தான், அப்போது மணலால் சிவலிங்கம் செய்து அலங்கார அபிஷேக தீப ஆராதனை செய்து வழிபடுமாறு குரல் ஒன்று ஒலித்தது. அதன்படி மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு அபிஷேகம் செய்ய முற்பட்டபோது அபிஷேக நீர் பட்டு மணல் லிங்கத்தின் ஒரு பகுதி கரைந்து போனது. இதனால் பல காலம் அபிஷேகம் செய்ய முடியாமல் மன வேதனை அடைந்த இந்திரன் தான் உருவாக்கிய மணல் லிங்கத்தை ஆரத் தழுவி கண்ணீர் விட்டு, இனி எந்தப் பின்னையும், நுகர மாட்டேன் எனக் கதறி அழுதான். அப்போது அவனது கை  விரல்கள் லிங்கத்தின் மீது பதிந்து விட்டன.பின் பெண் ஆசையால் ஏற்பட்ட சாபத்தால் பலக்காலம், பூலோகத்தில் தவித்த இந்திரனுக்கு சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்து அருளினார்.

அதன்படி கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இந்திரன் வழிபட்ட, அருள்மிகு ஸ்ரீ வெள்வளை நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கைச்சினேஸ்வரர், திருக்கோயில் ஆனது, திருவாரூர் மாவட்டம் கச்சினம் கிராமத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ ஆலயங்களில் இது 186 ஆவது தேவார ஆலயம் ஆகும். இந்திரன் மணலால் லிங்கம் செய்து வழிபட்ட பின்னர் அதனை கைகளால் எடுக்க முற்பட்டபோது, அவனது கையின் சின்னம் அதில் பதிந்து விட்டது எனவே இக்கோவிலானது  கைச்சினம் எனவும் அழைக்கப்படுகிறது, கிழக்கு நோக்கி மூன்று நிலை கோபுரத்துடன் காட்சியளிக்கும் இதன் உள்ளே நுழைந்தால், கொடி மரம், பலிபீடம், நந்தி தேவர் மண்டபம், உள்பிரகாரத்தில் விநாயகர், நவகிரகம், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. மற்றொரு சிறப்பாக கோவில் நிலத்தை தோண்டிய போது சுயம்பு வடிவாக தோன்றிய ஸ்ரீ சீனிவாச பெருமாளின்  திருமேனியானது இங்கு அருள் பாவிக்கிறது.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்