Tag: Yoga Mayam

  • Isha Yoga Mayam siva rathiri

    ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 4-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. 

    இந்த மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சத்குருவுடன் தியான லிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத ஆராதனையில் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார். புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களின் நினைவாக அவர் மரக்கன்றுகளை நடுகிறார். 

    தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி விழாவும் இடம் பெறுகிறது. விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.