Tag: Wednesday

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • wednesday pradhosha vazhipadu

    சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு பிரதோஷம் இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் என்றும், புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. 

    இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.

    புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசிக்க வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித்தர நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும். 
     

  • Vinayakar Wednesday

    முழுமுதற் கடவுள் விநாயக பெருமானை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார்.  இதற்காக வெறும் ஒரு ரூபாயை வைத்தே அந்த விநாயகப்பெருமானை ஏமாற்றி விடாதீர்கள். அவருக்குப் பிடித்த மற்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும். விநாயகருக்கு புதன்கிழமை தோறும் சில பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    எந்தெந்த பொருட்களை புதன்கிழமை அன்று வினாயகரிற்கு வாங்கி கொடுத்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. சிலருக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைத்து, முட்டிமோதி ஒரு தொழிலை ஆரம்பித்து இருப்போம். ஆனால் அதில் முன்னேற்றமே இருக்காது.

    ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றங்கள் இருக்காது. தேவையற்ற நபர்களால் பிரச்சனை வரும். சம்பள உயர்வு இருக்காது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்காது. கொடுத்த கடன் திரும்பி வராது. இப்படி நம்முடைய வருமானத்தை தடுக்கும் தடைகளை நீக்க விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும். அடுத்ததாக ஈட்டிய செல்வத்தை சேமித்து வைத்துக்கொள்ள, உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கோ அல்லது திருவுருவப் படத்திற்கோ ருத்ராட்ச மாலையை அணிவிக்கலாம்.

    வாரம் ஒரு முறை அந்த ருத்ராட்ச மாலையை எடுத்து பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊறவைத்து பின்பு அந்த மாலையை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது. அடுத்ததாக லட்சுமி தேவியுடன் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் முன்பு ஒரு அருகம்புல்லை வைத்து புதன்கிழமைகளில் செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த அருகம்புல்லை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டின் பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. இதேபோல் உங்களது வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு தினம்தோறும் இரண்டு ஏலக்காயை நைவேத்தியமாக படைத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று.