Tag: Viruchiga

  • Viruchiga rasi september rasi palan

    விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
    எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் அவசரத்தை விட்டுவிட்டு நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தனாதிபதி குரு தனஸ்தானத்தை அலங்கரிக்கிறார். ராசியை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை  செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். 

    பெண்களுக்கு  எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். 
    கலைத்துறையினருக்கு தனாதிபதி குருவின் சஞ்சாரம் பண வரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். சூரியனுடன் ராசியாதிபதி செவ்வாய் இருவரும் சேர்ந்து இருப்பதால் அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.

    அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். 
    மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 

    விசாகம்:
    இந்த மாதம் உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் தாராளமாக இன்று ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். 

    அனுஷம்:
    இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும். 

    கேட்டை:
    இந்த மாதம் எதிலும் நல்லது கெட்டதை  நிர்ணயிக்கும் திறமை குறையும்.  அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை  தவிர்ப்பது நல்லது. நீங்கள் உழைத்த அளவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். 

    பரிகாரம்:  வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருக பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்  உண்டாகும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 
    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13
    அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • Viruchiga rasiku ragu kedhu peyarchi

    விருச்சிக ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான விருச்சிகத்திற்கு ஏழாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால், உங்கள் துணையுடனான உறவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்தக் காலகட்டத்தில், உங்கள் இருவருக்கும் இடையே சிறு பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. 

    ஆனால் இவை பெரிதாகாமல், நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே எந்தக் காரணத்திற்காகவும் உங்கள் துணை அல்லது துணைவருடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். இதற்கு பதிலாக, நீங்கள் அவரிடம் கொண்டுள்ள அன்பையும், அக்கறையையும், இந்த நேரத்தில் தாராளமாக வெளிப்படுத்துங்கள். தவிர, இப்பொழுது உங்கள் தொழில் திடீரென்று மேம்பட்டு, உச்ச நிலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது ஆனால், இது போலவே, அது திடீரென இறங்கி விடவும் வாய்ப்புள்ளது. 

    எனவே உங்கள் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை நீங்கள் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் வணிகப் பரிவர்த்தனைகள் குறித்தும் கவனம் தேவை. எனவே தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில் பரிவர்த்தனைகள் அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

    எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொதுவாகவே, பிறருடன் பழகும் பொழுது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. தவிர, இப்பொழுது உங்கள் உடமைகளும் தொலைந்து போக வாய்ப்புள்ளதால், சிறிதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவற்றை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். எனினும், உங்களில் சிலர், அயல்நாடுகள், அங்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவற்றினால், சுமாரான ஆதாயங்களைப் பெற முடியும்.  

    கேது உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்கள் சொந்த ராசியான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, நீங்கள் உங்கள் பாதையில் தடைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். பொதுவாக இந்தக் காலக் கட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இல்லாத காரணத்தினால், நீங்கள் உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, மிக அவசியம். முக்கியமாக உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவைப்படலாம்.  

    இந்த நேரத்தில், இவ்வாறு உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதையே, உங்கள் முக்கியக் கடமையாகக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் தலைப் பகுதியில் அதிக அதிக கவனம் தேவை. வாழ்க்கையின் மற்ற துறைகளிலும் நீங்கள் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். மேலும், பிறருடன் நீங்கள் பழகுவது, அவர்களிடன் உங்கள் அணுகுமுறை போன்றவற்றிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்பொழுது எதையும் யதார்த்தமாக அணுகுங்கள. மற்றவர்களது நம்பகத்தன்மையை அதிகமாகவோ, குறைத்தோ மதிப்பிட வேண்டாம். தவிர, இப்பொழுது மற்றவர்களின் கண்களுக்கும் நீங்கள் உற்சாகம் இழந்தும், களையிழந்தும் காணப்படலாம். 

    உங்களில் சிலரது ஆளுமைக் குணங்களில் மாற்றமும் ஏற்படலாம். இது நல்ல மாற்றமாக இருக்குமாறு மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தை, சமய, ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது, வாழ்க்கைப் பிரச்சினைகளை நீங்கள் வெற்றி கொள்ள உதவும். பொதுவாக, கடவுள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளுங்கள். இது, நீங்கள்  தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும் இருக்க உதவும்.  

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்