Tag: viradham

  • Varalakshmi viradham poojai murai

    மகாலட்சுமியே நேரில் வந்து தன் பக்தர்களுக்கு உபதேசம் செய்த மிகச்சிறந்த ஒரு விரதமுறை ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருபவர்களும், ஒவ்வொரு வருடமும் புதிதாக ஆரம்பிப்பவர்களும் உண்டு. இந்த விரதம் சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமையவும், மற்றவர்கள் குடும்பத்தின் நலன் கருதியும், செல்வ செழிப்பு ஓங்கவும் கடைபிடிக்கும் ஒரு எளிய நோன்பு முறையாகும்.

    மகாலட்சுமியை கலசம் அமைத்து முகம் வைத்து அல்லது அதற்கு பதிலாக தேங்காய் வைத்து அழகாக அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைப்பது வழக்கம். புதிதாக ஆரம்பிப்பவர்கள் அல்லது இதை பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை. மகாலக்ஷ்மியின் படம் வைத்து அவர்கள் வழிபடலாம். கலசம் அமைப்பவர்கள் தொடர்ந்து மூன்று வருடம் இந்த பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. மகாலட்சுமியை முந்தைய நாள் வீட்டிற்கு அழைப்பது உண்டு. இல்லையேல் விரதம் அன்றைய நாள் அழைத்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.

    கலசம் அமைக்கும் முறை:

    பூரண கும்பத்தில் தோன்றிய மகாலட்சுமியை கும்பத்தில் எழுந்தருளச் செய்ய கலசம் அமைப்பார்கள். பித்தளை, வெள்ளி, தங்கம், செம்பு ஆகிய உலோகங்களில் ஒரு கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம் அல்லது அரிசி நிரப்பி வைக்கலாம். தண்ணீர் ஊற்றுபவர்கள் அதனுள் மஞ்சள், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள், வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி நிரப்பி வைக்க வேண்டும் என்றால் அரிசியுடன் ஒரு சிறிய அளவிலான பொட்டலத்தில் பருப்பு போட்டு வைக்க வேண்டும். அவற்றுடன் ஒரு ரூபாய் நாணயம், எலுமிச்சைபழம், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை, பாக்கு, பூ, கருகமணி ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும்.

    பின்னர் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து நடுவே கலசத்தின் மீது தேங்காயை மஞ்சள் தடவி குங்குமம் பொட்டு வைத்து மகாலட்சுமியின் முகமாக ஆவாகனம் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் திருமுகம் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. வாங்கி அழகாக அலங்கரித்து கொள்ளலாம். மகாலட்சுமிக்கு பட்டு பாவாடை அல்லது பட்டு புடவை, ரவிக்கை போன்றவற்றால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பம் போல கம்மல் மாட்டுவது, வளையல் போடுவது, சவுரி முடி தரிப்பது போன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த அளவிற்கு அழகாக மகாலட்சுமியை உருவகப்படுத்த முடியுமோ! அந்த அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    மஹாலக்ஷ்மியை அழைக்கும் முறை:

    கலசம் அமைப்பவர்கள் கலசத்தை தயார் செய்து அதனை ஒரு மனையின் மீது அமர்த்த வேண்டும். மனையை அலங்கரித்து மஞ்சள் தடவி கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது வாழை இலை விரித்து நெல்மணி அல்லது பச்சரிசி பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது கலசம் அல்லது நீங்கள் தயார் செய்த மகாலட்சுமியின் படம் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். மனையுடன் அப்படியே கொண்டு போய் வெளியில் வாசற்படியில் வைக்க வேண்டும். முந்தைய நாள் மகாலட்சுமியை அழைப்பதாக இருந்தால் வியாழன் கிழமை அன்று மாலை அலங்காரம் செய்து வாசலில் ஒரு கற்பூரம் ஏற்றி மகாலட்சுமியை எழுந்தருளும்படி உங்களுக்கு தெரிந்த முறையில் ஆவாகனம் செய்யுங்கள்.

    பின்னர் வீட்டிற்குள் அழைத்து வந்து நீங்கள் எந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய நினைக்கிறீர்களோ! அந்த இடத்தை கோலமிட்டு அலங்காரம் செய்து மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அழைப்பவர்கள் இதே முறையில் அழைத்து வந்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். முந்தைய நாள் அழைப்பவர்கள் வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து எளிமையான முறையில் அன்று பூஜைகளை முடித்து கொள்ளலாம்.

  • August 16 2024 Varalakshmi Viradham

    ஆகஸ்ட் 16 – வரலெட்சுமி விரதம்
    குரோதி வருடம் – ஆடி 31
    ஆகஸ்ட் 16 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  ஏகாதசி கா 6.43
    நட்சத்திரம் :  மூலம் கா 10.46
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Ishwaryam peruga Saturday Viradham

    பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமிருப்பதன் காரணம் பலபேருக்குத் தெரியாது. அதற்கான காரணத்தை தற்போது பார்ப்போம். புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார் என்பது ஐதீகம்.

    ஆகையால் சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் சனிபகவான் மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும். அப்படி செய்து வந்தால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.

  • Saibaba viradham

    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

    எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும்.

    முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.

    சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்.விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

  • Santhana gopala viradham

    பௌர்ணமியும் சந்தான கோபால விரதமும் இணைந்த நன்னாளில் சந்தான கோபாலருக்கு விரதமிருந்து சந்தான ஸ்ரீநிவாசரை வணங்க குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு விரைவில் நற்புத்தர பாக்கியம் அமையும்.

    குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் குழந்தை பாக்கியம் கிட்ட, வழிபடுவதற்கு உகந்த மந்திரம் சந்தான கோபால மந்திரம். சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும்.

    சந்தான கோபால மந்திரத்தை உச்சரித்தால், குழந்தை பேறு உண்டாகும் என்று கூறுகிறது ஆன்மிகம். சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

    முதல் மந்திரம்

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்
    தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே
    தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:
    தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

    பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

    இரண்டாவது மந்திரம்

    தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
    தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

    பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

    பௌர்ணமி திருவோணம், சுவாதி ரேவதி புனர்பூசம்,ஆகிய நாட்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஏதேனும் ஒரு தினத்தில் தம்பதி சமேதராக வந்து நம்பிக்கையோடு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இந்த மந்திரங்களை முறைப்படு உபதேசம் பெற்று பகவான் கிருஷ்ணரை நினைத்து வழிபட வேண்டும். புதன்கிழமைதோறும் சந்தான கோபால கிருஷ்ணனைப் பூஜித்து வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

  • Lakshmi arul thara udhavum puratasi pournami viradham

    புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை மட்டுமல்ல, பௌர்ணமியும் கூடி மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமி மாகலட்சுமிக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் விரதம் இருப்பதன் மூலம் வீட்டில் லட்சுமியின் அருளைப் பெறலாம்.

    லட்சுமியின் அருள் பெற உதவும் புரட்டாசி பௌர்ணமி விரதம்
    வீட்டில் லட்சுமி படத்துக்கு மாலை அணிவித்து, குத்து விளக்கில் தூய நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு தாமரை மலர்களை சூட்டி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    மாலையில் சந்திர உதயத்தைக் கண்டு, அம்பாளையும் தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை இல்லாத தம்பதிகள் இணைந்து இந்த பூஜையை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    புரட்டாசி மாத பெளர்ணமி தினத்தில்தான் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் அம்பிகையை வேண்டி விரதம் இருப்பார்கள். இன்றைய தினம் விரதம் இருப்பதன் மூலம் அவர்களது தவ வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.

    புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற பெயரும் உண்டு.

    இன்றைய தினம் மகாலட்சுமிக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் ஏற்ற நாள். இன்றைய நாளில் விரதம் இருந்து, வீட்டில் பூஜைகள் செய்து, அருகில் உள்ள மகாலட்சுமி கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று பூஜை செய்தால் பலனைப் பெறலாம். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்றைக்கு சிவனையும் சந்திரனையும் வழிபட்டால் திருமண பாக்கியம் விரைவில் கைகூடும். சிவ பக்தர்கள் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.

    பெளர்ணமி தினத்தில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, தியானம் செய்வது, மந்திரங்களை உச்சரிப்பது என எல்லாமே ஆன்ம சக்தியை அதிகரிக்கச் செய்யும். நம்மை ஆட்டிப் படைக்கும் தீய சக்தியில் இருந்து விடுவித்து,  அருள் கிடைக்கச் செய்யும்.

    புரட்டாசி மாத கிரிவலம் பூர்வஜென்ம பாவங்களையும் நீக்கவல்லது. மேலும், இந்த ஜென்மத்தில் நம்முடைய வாழ்வு சிறப்பாக இருப்பதற்கான அருளையும் பெற்றுத் தரும்.

     

  • August 5 2022 Varalakshmi Viradham

    ஆகஸ்ட் 5 – வரலட்சுமி விரதம்
    சுபகிருது வருடம் – ஆடி 20
    வரலட்சுமி விரதம், 
    கருட ஜெயந்தி, 
    துாத்துக்குடி பனிமயமாதா திருவிழா
    05-ஆக-2022 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    11.58
    நட்சத்திரம்    :    சுவாதி    ம    3.41
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • July 03 2022 Chadurthi viradham

    ஜூலை 3 – சதுர்த்தி விரதம் 
    சுபகிருது வருடம் – ஆனி 19
    03-ஜூலை-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    ம    3.09
    நட்சத்திரம்    :    மகம்    முழுவதும்    0.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • May 21 2022 thiruvona viradham

    மே 21 – திருவோண விரதம்
    சுபகிருது வருடம் – வைகாசி 7
    21-மே-2022 சனி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    8.27
    நட்சத்திரம்    :    உத்திராடம்    கா    6.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rama navami viradham irukkum murai

    மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக் கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. 

    கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள். ராம நவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.

    குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்க வேண்டும். பின்னர், வழக்கமான பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால்,பழம்,மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்க வேண்டும்.

    ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட வேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம். நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். 

    நிறைவாக வடையையும், வெற்றிலையை யும் அனுமனுக்குப் படைக்க வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். 

    அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாக எடுத்துக் கொள்ளுதல் நலம். இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். 

    இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி  விரதம் இருக்க வேண்டும். பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல் போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலை யும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். 

    இந்த வகையில் விரதத்தைக் கடைப் பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

    நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
    இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்!