Tag: VIP Dharshan

  • Thirupathy VIP Dharshan

    திருப்பதி விஐபி தரிசனத்திற்கு புக் செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தொகையை செலுத்தும் விதமாக மேற்படி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் பணம் செலுத்தலாம்.

    திருப்பதி கோவில் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்ட ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ரூ 10000 நன்கொடை செலுத்துகிறவர்களுக்கு விஐபி தரிசன வசதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கோவில் அறக்கட்டளைக்கு நிதி குவிவதுடன், விஐபி தரிசனமும் ஒழுங்கு படுத்தப்படுகிறது.

    தற்போது ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் நிதி அளிக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ‘ஆப்’பில் பத்தாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, ரூ 500-க்கு விஐபி தரிசன டிக்கெட் பெறலாம். ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன்லைனில் பணம் செலுத்த, கடந்த 21-ம் தேதி முதல் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • thirupathy VIP Dharshan

    ஒரு பக்தர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

    இதற்காக www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற லிங்க் மூலமாக ரூ 10 ஆயிரம்  நன்கொடை செலுத்தி ரூ 500 விஐபி டிக்கெட்டுகளை பெறலாம்.

    நேரடியாக திருமலைக்கு வந்தாலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி விஐபி டிக்கெட்டுகளை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் அனைத்து பக்தர்களும் விஐபி தரிசனத்தில் செல்லவேண்டும் என்பதே இந்த திட்டம்.

    ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு 500 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

  • Thirupathyil Donation VIP Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

    திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐம்பதாவது அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு .திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

    அதில் பேசிய அவர்  தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 10 கோடி ரூபாயில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் படிக்க கூடிய மாணவ , மாணவிகளுக்காக 100 கோடி ரூபாயில் விடுதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின்  தண்ணீர் தேவைக்காக திருப்பதியில் பாலாஜி அணை கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவை என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு  பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாஙா. 

     தேர்தல் போது தேர்தல் அதிகாரிகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்ட 1371 கிலோ தங்கத்தை மீண்டும் ஓராண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்த வித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுமதிக்க அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எவ்வளவு நன்கொடை வழங்கினால், எத்தனை பேரை அனுமதிப்பது, ஆன்லைனில் நன்கொடை பெறுவதா, அல்லது நேரடியாக வந்து நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்குவதா என்பது  குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

  • Atthi Varadhar VIP Dhnarshan

    40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொது தரிசனத்திற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகிறது. 

    இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவக்டிககைகளை எடுத்து வருகிறது. 

    இதன்படி விஐபி தரிசனம் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வந்தால் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கபடுவார்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

  • Thirupathy VIP Dharshan Issue

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று விதமான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்படும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். 

    இதனால் அதிகமுறை சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆண்டில் ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்தில் செல்லும் விதமாக செய்யப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார். 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் செயல்பட்டு வரக்கூடிய பர்டு மருத்துவமனையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி , திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணைய தலைவர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். 

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பர்டு மருத்துவமனையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்து உத்தரப்பிரதேசம் , ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

    இங்கு சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரக்கூடிய உறவினர்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். சுமார் 4 கோடியில் 40 அறைகள் கூடுதலாக கட்டப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    அறுவை சிகிச்சை மையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான ஆலோசனை செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

    இந்த மருத்துவமனையை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். கடந்த வாரம் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து சிவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவாரி சேவா  தன்னார்வலர் குடும்பத்தினரை தேவஸ்தானம் சார்பில் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி அந்த குடும்பத்திற்கு துணையாக தேவஸ்தான நிர்வாகம் இருக்கும் என்றார் அவர். 

    மேலும், ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்களில் எல் 1, எல்2,  எல் 3 என மூன்று ரகமாக பிரித்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த மூன்று தரிசன முறையும் ரத்து செய்யப்படும் என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

    முக்கிய பிரமுகர்களுக்கு அவரவர் பதவி மற்றும் தகுதிக்கேற்ப எவ்வாறு தரிசனம் செய்து வைப்பது என்பது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசித்து சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நல்ல முடிவை விரைவில்  எடுக்கப்படும். 

    ஒரே ஆண்டில் அதிக முறை தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டில் ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வரும் விதமாக செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 

    ஏற்கனவே  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது முக்கிய பிரமுகர்கள் ஆண்டில் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனால் சாதாரண பக்தர்கள் சிரமம் அடைவதைத் தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .