Tag: Vijayadhasami

  • vijayadhasami special ambigai vazhipadu

    வெற்றித்திருநாளான விஜயதசமியில் அம்பிகையின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டை படித்தால் மனதில் நினைத்தது இனிதே நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.
    உலகத்தைக் காத்தருளும் அம்பிகையே!
    நீலகண்டரின் கரம் பிடித்தவளே!
    ஆனை முகனின் அன்னையே!
    வேதம் போற்றும் வித்தகியே!
    ஞானச் சுடர்க்கொடியே! மரகத வல்லியே!
    நிலவொளியாய் பிரகாசிப்பவளே!
    கருணை மழையே!
    அம்மா! உன் தாமரைத் திருவடிகளில் சரணடைந்தோம்.

    மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே!
    கற்பகம் போல் வாரி வழங்குபவளே!
    மலையத்துவஜன் மகளே!
    அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே!
    ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே!
    திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே!
    ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே!
    எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

    புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே!
    சாம்பவியே! சங்கரியே! சியாமளையே!
    மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே!
    மதங்க முனிவரின் மகளாக வந்தவளே!
    பிரபஞ்சத்தைப் படைத்தவளே!
    வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே!
    எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.

    கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே!
    காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே!
    காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே!
    அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே!
    திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே!
    வெற்றி தேவதையே!
    உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.

  • October 05 2022 Vijayadhasami

    அக்டோபர் 5 விஜயதசமி
    சுபகிருது வருடம் – புரட்டாசி 18
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்,
    விஜயதசமி,
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா,
    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர்,
    ஸ்ரீவில்லி புத்துார் பெரியபெருமாள் தேர்
    05-அக்-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                         
    திதி    :    ஏகாதசி         
    திதி நேரம்    :    தசமி    கா    11.32
    நட்சத்திரம்    :    திருவோணம்    இ    9.33
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • saraswathi poojai, vijayadhasami poojai time

    சரஸ்வதி பூஜை, விஜயதசமி, வழிபாட்டு  சுப நேரங்கள் விவரம்:-

    சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள் 4-10-2022 செவ்வாய் கிழமை, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு செய்ய உகந்த சுப நேரங்கள் விவரம்:-

    காலை 10.30 முதல் 11.00 மணி வரை,

    பகல்  12.00 முதல் 1.00 மணி வரை,

    மாலை 4.30 முதல் 6.00 மணி வரை,

    இரவு  7.00 முதல் 8.00 மணி வரை,

    குறிப்பு:- காலை 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை தொடர்ந்து 2.30 மணி நேரமும் நல்ல நேரம், வழிபட உகந்த உத்தம நேரம் ஆகும்.

    புரட்டாசி 18 ம் நாள் 5-10-2022 புதன்கிழமை விஜயதசமி திருநாள் சுப நேரங்கள் :-

    காலை 9.00 முதல் 10.00 மணி வரை,

    பகல்  1.30 முதல் 3.00 மணி வரை,

    மாலை  4.00 முதல் 5.00 மணி வரை,

    இரவு  7.00 முதல் 10.00 மணி வரை,

    குறிப்பு:- காலை 9.00 முதல் பகல் 12.00 மணி வரை வழிபாடு செய்ய உகந்த உத்தம நேரமாகும்.

  • vetri thiruvizha vijayadhasami

    உலகை ஆட்டிப் படைத்த மகிஷாசூரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தென்னிந்தியாவில் மகிஷாசுரனை துர்க்கை வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவமியில் சரஸ்வதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூஜை நடத்தி தசமி அன்று ஆயுதபூஜை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூஜை நடத்துகின்றனர்.

    இராமாயணத்தில், இராவணன் சீதையை கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு இராமன் ராவணனிடம் கோரினார், ஆனால் இராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன், இராவணனை, விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற இந்நாளை, ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது

    மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர்

  • October 15 2021 Vijayadhasami

    அக்டோபர் 15  விஜயதசமி 
    பிலவ வருடம் – புரட்டாசி 29
    விஜயதசமி, 
    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் தேர், 
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    15-அக்-2021 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    9.00
    நட்சத்திரம்    :    திருவோணம்    ம    12.56
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Vijayadhasami banana tree

    விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன் , பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனுனை அழிக்க முடியவில்லை.

    இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும்படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார். அப்போது போரில் தொல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான்.

    இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேலையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.