Tag: Veetil

  • Veetil selvam nilithirukka

    ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார்.  ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடைய விஸ்வரூபம் எடுத்தார்.

    ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல

    ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித

    தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன

    ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஸ

    ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்

    ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ

    சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள். ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும். இதைச் சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். 
     

  • Veetil Deepam Vazhipadu

    வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

    தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:

    கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

     பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

     சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

    தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.

    திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

    மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

    தீபத்தின் வகைகள்:

    தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

    சித்ர தீபம்
    வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

    மாலா தீபம்
    அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

    ஆகாச தீபம்
    வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

    ஜல தீபம்
    தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

    படகு தீபம்
    கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

    சர்வ தீபம்
    வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.

    மோட்ச தீபம்
    முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

    சர்வாலய தீபம்
    கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

    அகண்ட தீபம்
    மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

    லட்ச தீபம்
    ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

    மாவிளக்கு தீபம்
    அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்

  • Veetil Deepam Etrum Murai

    எத்தகைய மேன்மை பொருந்திய , திருமகளின் அம்சமான திரு விளக்கை ஏற்றுவதற்கு முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருகின்றன .விளக்கு ஏற்றும் முன் வீட்டின் முன்கதவைத் திறந்து வைத்து பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்ம முகூர்தமான அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும் . 

    மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் எல்லா வளமும், நலனும் நமக்கு கிட்டும் . விளக்கை குளிர்விக்கும் போது, பூவால் குளிர்விக்கலாம் அல்லது தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.. விளக்கின் ஒளி நம் வீட்டினை எப்படி பிரகாசமாக மாற்றுகிறதோ அதன் பலன் நம் மன இருளையும் அகற்றி ஒளி பெறச் செய்யும் .

    விளகேற்றுவதினால் ஏற்படும் பலன்கள்

    ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
    இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
    மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
    நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
    ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்

    விளக்கேற்றும் திசை

    கிழக்கு திசை – துன்பங்கள் நீங்கும் , குடும்பம் அபிவிருத்தி அடையும்
    மேற்கு திசை – கடன் மற்றும் , தோஷங்கள் நீங்கும்
    வடக்கு திசை – திருமணத்தடை அகலும்
    தெற்கு நோக்கி- எக்காரணம் கொண்டும் எத்திசையில் விளக்கேற்றக்கூடாது.
    கோயிலில் நாம் ஏற்றும் தீபத்திற்கு நிறைய பலன்கள் உண்டு. நம்மை அறியாமல் செய்த பாவங்கள் கூட தீபத்தை தரிசிப்பதால் விலகிவிடும்.