Tag: Vasantha

  • Valamana vazhvu tharum vasanth panchami

    சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், அம்பாளைத் தொழுது வழிபாட்டால், வாழ்வில் வசந்தம் நிச்சயம். சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம். 

    பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்.

    வசந்த பஞ்சமி நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை வழிபடலாம்.

    அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.
     

  • Vasantha Panjami Naal

    பிப்ரவரி 10 
    விளம்பி வருடம் – தை 27
    வசந்த பஞ்சமி
    10-பிப்-2019 ஞாயிறு  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    பஞ்சமி    கா    11.21
    நட்சத்திரம்    :    ரேவதி    மா    4.58
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்