ஜூலை 31 – வரலட்சுமி விரதம்
சார்வரி வருடம் – ஆடி 16
வரலட்சுமி விரதம், சங்கரன்கோவிலில் தேர்
31-ஜூலை-2020 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி இ 11.43
நட்சத்திரம் : கேட்டை கா 8.52
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: Varalakshmi Viradham
-
July 31 Varalakshmi Viradham
-
Varalakshmi viradham thondriya kadhai
செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம்.
பெயர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தரும் விரதம் இல்லை இது. நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு என்று எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது.
இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி முதன் முதலாக சொன்னவர் மகாலட்சுமியேதான்! ஆமாம், சாருமதி என்ற பெண்ணின் கனவில் வந்து இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று சொன்னாள். அந்த சாருமதி, வடஇந்தியாவில், மகத நாட்டில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பெண். தன் மாமனார், மாமியாருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து, கணவனை தெய்வமாக மதித்து, கற்புநெறி தவறாமல், பயபக்தியோடு வாழ்க்கை நடத்தியவள்.அவளுடைய இந்தப் பண்புகளைப் பார்த்து சந்தோஷப்பட்ட மகாலட்சுமி, அவள் மேலும் எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றியும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றியும் விவரமாகச் சொன்னாள், மஹாலட்சுமி.
இதில் ஒரு விஷயத்தை கவனித்தல் வேண்டும். அதாவது, மகாலட்சுமி சாருமதியின் குணத்தைப் பாராட்டி உடனே செல்வத்தை வாரி வழங்கிவிடவில்லை. விரதம் இருக்கச் சொல்லி, அதன் பலனாகத்தான் அவள் எந்த வளத்தையும் அனுபவிக்கவேண்டும் என்றும் உணர்த்தியிருக்கிறாள். ’இந்த விரதத்தைப் பெண்கள்தான் அனுசரிக்கவேண்டும் என்பதில்லை, ஆண்களும் மேற்கொள்ளலாம்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் விக்கிரமாதித்த மகாராஜா போன்றவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆடி மாதம் பவுர்ணமிக்கு முந்தின வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். சில வருடங்களில் ஆவணி மாதத்திலும் இந்த விரதநாள் வரும். அதேபோல இந்த ஆண்டும் ஆவனி 8 ஆம் தேதி வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
-
August 9 Varalakshmi Viradham
ஆகஸ்ட் 9 – வரலட்சுமி விரதம்
விகாரி வருடம் – ஆடி 24
வரலட்சுமி விரதம்
09-ஆக-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : நவமி
திதி நேரம் : நவமி ம 2.57
நட்சத்திரம் : அனுஷம் இ 2.54
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Varangali tharu varalakshmi viradham
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார். வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவை :
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும். மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
-
Varalakshmi viradham 108 pottri
வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.
சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.
ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீபசோதியே போற்றி
ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப ஜோதியே போற்றி
ஓம் துயரம்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் திருவமு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
ஓம் அமரர் குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம் தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்பப் பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் ஈடிலா அன்னை போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சத்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம் பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கஜ வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட்சுமியே போற்றி
ஓம் முக்தியை அருள்வாய் போற்றி
ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணே எம் விதியே போற்றி
ஓம் விவேகம் தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம் தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக்கன்னி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாயாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேத வல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப்
பெரியர்க் கருள்வாய் போற்றி
ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
கருள்வாய் போற்றி
ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க்
கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருள்மிகு லட்சுமிதாயே
போற்றி போற்றி போற்றி