Tag: Ugadhi

  • Ugadhi thirumalai cleaning

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 9 தேதி உகாதி தெலுங்கு வருட பிறப்பு ஆஸ்தானம்  நடைபெறள்ளது. இதையொட்டி  காலை சுப்ரபாத சேவை மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிதகு 6 மணி முதல் 11 மணி வரை கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடைபெற்றது. இதனால்  பக்தர்கள்  6 மணி நேரத்துக்கு பிறகு 11 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று நித்ய பூஜைகளுக்கு பிறகு  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    கோயில் ஆழ்வார்  திருமஞ்சனம் முடிந்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, கோயில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி ,   மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • ugadhi vazhipadu murai

    காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. 

    இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். 

    ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம். 

    வசந்த காலத்துக்கு வரவேற்பு விழா :

    யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். 

    எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 
     
  • Ugadhi Pachadi

    யுகாதி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    பொடியாக நறுக்கிய மாங்காய் – 1 கப்  
    வேப்பம்பூ – 1 டேபிள் ஸ்பூன் 
    வெல்லம் – 1 கப் 
    தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன் 
    புளி சாறு – 4 டேபிள் ஸ்பூன் 
    மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு 
    தண்ணீர் – 3 கப் 

    செய்முறை : 
     முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.  மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். யுகாதி ஸ்பெஷல் பச்சடி ரெடி.

  • ugadhi viradham

    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும். மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் – ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.
     
  • Ugadhi Vazhipadu Murai