Tag: #TirupatiLaddu #LordVenkateswara #DivineBlessings #VaghulaDevi #CelestialWedding #SouthIndianTemples #DivineFood #SpiritualJourney #Tirumala #HeavenlyOfferings #SacredTraditions #HinduCulture #DivineG

  • The Perspective of the Foster Mother on Tirupati Laddu

    வளர்ப்புத் தாயின் பார்வையில் திருப்பதி லட்டு

    விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணரிடம் அவரது வளர்ப்பு தாயான யசோதா, "கிருஷ்ணா, உனது திருமண கோலங்கள் எதையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே?" என இயக்கத்துடன் கேட்டால், அதற்கு கிருஷ்ணன் கலியுகத்தில் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

    விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தபோது, யசோதை அம்மையார் வெங்கடேஸ்வரரின் வளர்ப்பு தாயாக வகுலா தேவி என்ற திருநாமத்துடன் மீண்டும் பிறந்தார்.

    அப்போது, வெங்கடேச பெருமாளுக்கும் பத்மாவதி தாயார்க்கும் பின்னாளில் நடைபெற்ற திருமணத்தை வகுலா தேவி கண்டு ஆனந்தம் அடைந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. வெங்கடேச பெருமாளின் திருமண விழாவிற்கு வந்த முக்கோடி தேவர்களுக்கு தலைவாழை இலை போட்டு அருஞ்சுவை உணவு பரிமாறப்பட்டதாகவும், அதில் இடம் பிடித்த லட்டு வகுலா தேவியின் திருகரங்களால் செய்யப்பட்டது என்றும் தெய்வீக மனத்துடன் அதன் சுவை இருந்ததால் தேவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு லட்டுவை விரும்பி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இன்றளவும், திருப்பதி லட்டு ஆகம விதிகளை கடைப்பிடித்து பக்தியுடன் செய்யப்படுவதோடு, லட்டு தயாரிக்கும் பணியை இப்போதும் லகுலா தேவி கண்காணித்து வருவதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீ வகுல மாதா கோவில், திருமலை மலையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பேரூர் கிராமத்தில், ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து, திருவள்ளூர்.