Tag: Tirupathy Ezhumalayan

  • Tirupathy Ezhumalayan Simma vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் மூன்றாவது நாள் சிம்ம வாகனத்தில் ஏழுந்தருளிய மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். 

    இன்று இரவு  முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன்  அருள் பாலிக்கவுள்ளார். 

    நாளை காலை கற்பக விருட்ச வாகனம் சொற்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது கல்ப விருக்‌ஷ மரம். அது போன்று கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நாளை காலை கற்பக விருட்ச வாகனத்தில்  அருள் பாலிக்கவுள்ளார்.