Tag: Thulam Rasi

  • Thulam Rasi Shakthi Online – May Monthly Prediction – 2024

    துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    கிரகநிலை:

    பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    நன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து நியாய வழியில் அடுத்தவருக்கும் உதவி புரிந்திடும் துலாம் ராசி அன்பர்களே,

    இந்த மாதம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.வீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும்.  

    குடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

    தொழிலதிபர்கள் தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெற்றியும் உண்டாகும்.  தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துங்கள். உங்களுக்கு உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

    பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.

    கலைஞர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.

    அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

    மாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படிப்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள். வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

    சித்திரை 3, 4 பாதம்:

    இந்த மாதம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

    சுவாதி:

    இந்த மாதம் இனம்புரியாத கவலை மனதில் குடி கொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

    இந்த மாதம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.

    பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் அனுகூலமான பலன்கள் பெற்று புகழான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 09, 10
    அதிர்ஷ்ட தினங்கள்: 03, 04, 30, 31

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Thulam Rasi July Monthly Prediction Sakthi Online – 2023

    துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு  – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்   என கிரக நிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    02-07-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    03-07-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    04-07-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-07-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    23-07-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சகலரிடமும் நீதியும் நியாமும் கொண்ட துலா ராசியினரே நீங்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.  தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

    கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள்  கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் தீர்வதில்  தாமதம் ஏற்படும்.

    மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

    சித்திரை 3, 4 பாதம்:

    இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    சுவாதி:

    இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

    இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

    பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Thulam Rasi April Monthly Prediction – 2023

    துலாம்:

    கிரகநிலை:

    ராசியில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    07-04-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    14-04-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:

    கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

    தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப்பளு ஆகியவை இருக்கும்.

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

    பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.

    சித்திரை:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

    ஸ்வாதி:

    இந்த மாதம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

    விசாகம்:

    இந்த மாதம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

    பரிகாரம்: சிவன் கோயிலுக்கு  சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Thulam rasi March Monthly Prediction – 2023

    துலாம்:

    கிரகநிலை:

    ராசியில் கேது  – சுக ஸ்தானத்தில்  சனி  – பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூரியன்  – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் ராகு  – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    09-03-2023அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    13-03-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    14-03-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-03-2023 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    29-03-2023அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:

    எதை செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதிகாரம் செலுத்தும் ஆர்வமும் கொண்ட துலா ராசியினரே இந்த மாதம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

    தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

    பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

    கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

    மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

    சித்திரை:

    இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

    ஸ்வாதி:

    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

    விசாகம்:

    இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

    பரிகாரம்: துர்க்கை தேவிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Thulam Rasi January Monthly Prediction – 2023

    துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    கிரகநிலை:
    ராசியில் கேது – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – சப்தம ஸ்தானத்தில் சந்திரன், ராகு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில்  செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:
    08-01-2023 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    13-01-2023 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    15-01-2023 அன்று சூரிய பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    23-01-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:
    நியாயமுள்ளவர்களுக்காகவும் நலிந்தவர்களுக்காகவும் பாடுபடும் குணமுடைய துலா ராசி அன்பர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

    பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்.

    கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும்.

    அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

    மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை ஏற்படும்.

    சித்திரை:
    இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

    ஸ்வாதி:
    இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

    விசாகம்:
    இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    சந்திராஷ்டம தேதி: 3, 4, 30, 31
    அதிர்ஷ்ட தேதி: 24, 25

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Thulam rasi Monthly Prediction – September 2022

    துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:
    ராசியில்  கேது – சுக ஸ்தானத்தில் சனி(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – சப்தம ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றம்:
    01-09-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
    25-09-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:
    காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட துலா ராசியினரே நீங்கள் எந்த காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். சூரியனால் நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

    தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும்.

    பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

    அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.

    கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

    சித்திரை 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் பெறும்.  மனதில் தைரியம் கூடும்.  சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

    சுவாதி:
    இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.  பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

    விசாகம் 1, 2, 3ம்  பாதங்கள்:
    இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

    பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: செப் 16, 17
    அதிர்ஷ்ட தினங்கள்: செப் 09, 10

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Thulam Rasi Aug Monthly Prediction – 2022

    கிரகநிலை:
    ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் புதன், சந்திரன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    07-08-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    10-08-2022 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். சூரிய சுக்கிரன் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

    தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.     
    பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். 

    மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 

    சித்திரை 3, 4 பாதம்:
    இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    சுவாதி:
    இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
    இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

    பரிகாரம்:  குலதெய்வத்தை வணங்கிவர பணவரத்தில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: ஆக 20, 21
    அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 11, 12
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Thulam rasi July Month Prediction – 2022

    துலாம்:

    கிரகநிலை:
    ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    12-07-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-07-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    17-07-2022 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    29-07-2022 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    சொந்த முயற்சியில் முன்னுக்கு வரக் கூடிய ஆற்றல் உடைய துலா ராசியினரே இந்த மாதம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

    குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.

    பெண்கள் கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.

    மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

    சித்திரை 3, 4:
    சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

    சுவாதி:
    புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். சந்திரன் சஞ்சாரம் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

    விசாகம் 1, 2, 3:
    தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்

    பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு தாமரை மலர்களை சமர்பித்து வழிபட்டு வரவும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • thulam rasi bilava aandu rasi palan

    (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)
    துலா  ராசி அன்பர்களே இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.  பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான  போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.

    தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  

    பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 

    கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். 

    மாணவர்களுக்கு: கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு:   உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். 

    சித்திரை:
    இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். காரியவெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது.

    ஸ்வாதி:
    இந்த ஆண்டு காரிய தடை ஏற்படலாம். எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் அடையும். கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்றுவர நேரிடலாம்.

    விசாகம்:
    இந்த ஆண்டு கெட்ட கனவுகளிலிருந்து விடுபடலாம். மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். சாதகமான பலன்கள் உண்டாகும்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி;
     

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

  • thulam rasikku june month rasi palan

    (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    இந்த மாதம் நிம்மதியான காலகட்டமாக இருக்கும். ஓய்வு எடுப்பீர்கள். கடுமையான உழைப்பிற்குப் பிறகு அதற்கான பலனை அடைவீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு  மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

    குடும்பத்தில் குடும்பச் சூழ்நிலை ஓரளவு மனநிம்மதியைத் தரும். நெருங்கிய உறவினர்களிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டிருந்தால் இப்போது அது சரியாகி விடும். வீண் செலவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்ப ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். சொத்து பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

    தொழில் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அகலும். நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் வேலைக்குச் சென்று வரும் அன்பர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதற்கு வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய நற்பெயர் உங்களுக்கு கிடைக்கும்.

    பெண்களுக்கு சுமாராகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவீர்கள். 

    மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்யலாம்.

    அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

    கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். 

    சித்திரை 3, 4 பாதம்: 
    இந்த மாதம் யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள். 

    சுவாதி:
    இந்த மாதம் உடனிருப்போரால் பிரச்சனை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும். அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. 

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
    இந்த மாதம் அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன்
    பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டு வாருங்கள்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542