Tag: Thiruthani murugan Palabishegam

  • Thiruthani murugan Palabishegam


    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து வந்து அலகு குத்தியும் மலைக்கோயில் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

     அப்பொழுது பங்குனி உத்திர சிறப்பு நிகழ்ச்சியாக பக்தர்கள் முன்னிலையில் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி அளித்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.