திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கிய வைகாசி விசாகத் திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கிய வைகாசி விசாகத் திருவிழா
நவம்பர் 28 – திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
சார்வரி வருடம் – கார்த்திகை 13
திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
28-நவ-2020 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : திரையோதசி கா 11.47
நட்சத்திரம் : பரணி அ.கா 4.59
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கொடியேற்றம் இன்று 7:15 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் மாவிலை, தர்ப்பைப்புல், பூமாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவினை ஒட்டி சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28ஆம் தேதி மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 29ஆம் தேதி மாலையில் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் மகாதீபம் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் தேரோட்டம் – பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தனர்.
அறுபடைவீடுகளில் முதற் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26ந் தேதியுடன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனை முன்னிட்டு காலை மாலை வேளையில் ஸ்ரீ முருக பெருமான் ஸ்ரீ தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்கள்.
இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி முருகன், தெய்வானையுடன் தெப்பத்தில் முட்டு தள்ளு வைபவம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கபட்ட திருத்தேரில் சுவாமி முருகபெருமான், தெய்வானையுடன் வைக்கப்பட்டு 16 கால் மண்டபத்தில் இருந்து துவங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
இவ்வைபவத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக வந்து அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் வருகிற 8 ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டு வருகிறது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடந்தோறும் தை தெப்ப திருவிழா தை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு முருகன் தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு முருகன் தெய்வானை முன்னிலையில் காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவினை முன்னிட்டு தினமும் முருகன் தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பூத வாகனம் ,அன்ன வாகனம் ,சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 3 ஆம் தேதி தெப்ப முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து முருகன் தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தெப்பம் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலையில் முருகன் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 11 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளுவார்.
அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் சுற்றிவந்து முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதேபோல இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்பம் சுற்றுதல் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முடிவுற்ற நிலையில் இன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது – 29 லட்சத்து78 ஆயிரம் காணிக்கை பணமாகவும், 175 கிராம் தங்கமும், 2 கிலோ 75கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளார்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முடிவுற்ற நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
உண்டியல் காணிக்கையை அறநிலையத் துறை ஊழியர்கள், பொதுமக்கள், பக்தர்கள், குருகுல மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காணிக்கை எண்ணும் பணியினை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
உண்டியல் எண்ணும் பணி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, கோவில் பேஷ்கார் தேவகி ஆகியோர் முன்னிலையில் இன்று காலை தொடங்கி மாலை முடிவுற்றது. இதில் சுப்ரமணியசுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணம், நாணயங்கள், தங்கம், வெள்ளி, மலேசியா நாணயம் போன்றவற்றை சேர்த்து பொதுமக்கள் பார்வையில் தரம் பிரிக்கப்பட்டது.
இதில் 172 கிராம் தங்கமும், 2.75 கிலோ வெள்ளியும், பணம் ரூ 29 லட்சத்து,78, ஆயிரத்து10 ருபாய் பணமும் மற்றும் மலேசியா கரன்சிகள் முதலானவை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். இதில் மலேசிய டாலர்கள் அதிக அளவில் பொதுமக்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 28-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்க உள்ளது.
நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை 7 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அக்டோபர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் எழுந்தருளும் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கும் காப்புக்கட்டுதல் நடக்கிறது.
விழாவையொட்டி கோவிலுக்குள் தினமும் காலை 11 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். இதேபோல் தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மறுநாள் 2-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்கார லீலையும் நடைபெறும்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த தங்கத்தேரை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேர் இழுக்க கட்டணமாக ரூ 2000/- வசூலிக்கப்படுகின்றது.
கடந்த 2 ஆண்டுகளாக பரமரிப்பு பணி காரணமாக இழுக்கப்படாமல் இருந்த தங்க தேர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தங்கத்தேரின் இயக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தங்கத் தேரை நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்து தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் மைய மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தங்கத் தேரை திருக்கோவில் இணை இயக்குனர் பொறுப்பு அதிகாரி மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு ஆராதனை நடைபெற்றது அதில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தங்கத்தேர் புறப்பாடு மீண்டும் தொடங்கியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.