Tag: Thirumalai

  • Thirumalai Hanuman Jayanthi Festival

    திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்.. விழாவில்  கலந்துகொண்டு அனுமனை தரிசித்த திரளான பக்தர்கள்.

    திருமலையில் ஹனுமத் ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் பாபநாசம் ஆகாச கங்கா செல்லும் வழியில்  ஜாபாலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் பலர் இந்த  ஆலயத்திற்கு வந்து அனுமானை தரிசிப்பது வழக்கம் இன்று ஹனுமத்ஜெயந்தி விழா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாபாலியில் ஆலயத்தில் கொலுவீற்றி ருக்கும்  அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரத்தை ஜாபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார் . திருத்தல வரலாற்றின்படி  ஜாபாலி என்ற முனிவர் தனது சீடர்களுடன் இப்பகுதியில் இருந்து கொண்டு ஏழுமலையானுக்கு தொண்டு புரிந்து வந்ததாகவும் ராம பக்த ஹனுமானை தியானித்து அவரை வழிபட அனுமான் ஜாபாலி  முனிவருக்காக பிரதிக்ஷமாக தோன்றி அருள் பாலித்ததால்   ஜாபாலி அனுமான் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.

  • Thirupathy thirumalai new road

    கடப்பா மாவட்டம் குக்கலதொட்டியில்  இருந்து திருப்பதி மலைக்கு அன்னமய்யா மார்க்கம் வழியாக மூன்றாவது மலைப்பாதைக்கு  திட்ட அறிக்கை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய தாளப்பாக்கம் அன்னமய்யா தன்னுடைய வாழ்நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள குக்கலதொட்டி பகுதியில் இருந்து திருமலைக்கு நடந்து  சென்றார்.

    பலமுறை அந்த வழியாக அன்னமய்யா திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு நடந்து சென்றிருக்கிறார். எனவே அந்த பாதைக்கு அன்னமய்யா மார்க்கம் என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் அந்த வழியில் பக்தர்கள் யாரும் இப்போது நடந்து செல்வது கிடையாது.

    இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் உள்ள 2வது பாதை கடும் சேதமடைந்தது. இதற்குமுன் எப்போதும் ஏற்படாத வகையில் மலைப்பாதை சேதமடைந்த காரணத்தால் மூன்றாவது பாதை ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ளது.

     இந்த நிலையில் அன்னமய்யா மார்க்கம் வழியாக மூன்றாவது மலைப்பாதை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அதிகாரிகளுடன் அன்னமய்யா மார்க்கம் பகுதிக்குச் சென்று திருப்பதி மலைக்கு மூன்றாவது சாலை அமைப்பது பற்றி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கிருந்து திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபம்  23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

     இதே வழியில் பாரிவேட்டை மண்டபம் பகுதிக்கு அன்னமய்யா நடந்து சென்றிருக்கிறார். எனவே மிகவும் புராதனமான இந்த வழியில்  23 கிலோமீட்டர் தூரம் திருப்பதி மலைக்கு மூன்றாவது சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

  • Intriguing Secrets of Tirupati Venkateshwara idol

    There are millions who worship Lord Venkateshwara of Tirumala, but there are very few who know the glory of the statue of Tirupati Ezhumalayan. Let’s take a look at the intriguing secrets of the Lord’s statue in Tirumala, Tirupati. The Tirupati Venkateshwara statue is made of a 250 crore year old rare rock called "Silatoranam". Tirumala is located at an altitude of 3,000 feet. At such a cold temperature, The Lord is anointed (abhishegam) with cold water, milk, Sandalwood paste, etc at 4.30 am, but when the abhishegam is over, Lord Venkateshwara sweats. An intriguing fact, indeed!

    It is believed that Lord opens his third eye during the anointing, hence heat emanates!

    Scientifically, applying tender camphor on black stone or a statue carved out of it, will cause it to explode immediately. But, despite being applied with tender camphor throughout the day, there is no hazardous reaction.

    The sculptor's chisel marks are visible on any statue. Even a metal statue shows the moulding marks. But nothing like that is seen in the Lord’s Statue.

    Take any stone statue, it will have a rough texture. But, the intricate carvings on Ezhumalayan Thirumeni are all so smooth!

    So next time you visit Tirumala, think of how marvellous the Lord is and rever his mysterious Thirumeni!

  • Thirupaty to Thirumalai Electric Bus

    சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளும் இயக்குவதற்கு தேவஸ்தானம் ஊக்குவிப்பு அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி

    திருப்பதி திருமலை இடையே சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளை கடந்த இரண்டு தினங்களாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு விளக்கம் அளித்தனர். 

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பா ரெட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு டீசல் மூலம் இயக்கப்பட்டு வரும் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தற்போது உள்ள டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக  பெங்களூருவில் உள்ள வீரா வாகனா உத்யோக பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம்  மாற்றப்பட்டுள்ளது.

    மின்சார பேருந்துகளாக மாற்றப்பட்ட பேருந்தில் திருப்பதி – திருமலை இடையே மலைப்பாதையில்  கடந்த இரண்டு நாட்களாக ஒரு நாளைக்கு மூன்று முறை சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்திற்கு ஒருமுறை சார்ஜிங் செய்தால் சுமார் 170 கி.மீ பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்தார். 

    இதையடுத்து திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத்தலைவர் முகாம் அலுவலகத்தில் இருந்து அன்னமய்ய பவன் வரை மின்சார பேருந்தில் பயணித்து பேருந்து ஆய்வு செய்தார். இதில் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் செங்கல் ரெட்டி, போக்குவரத்து துறை அதிகாரிகள் நரசிம்ஹுலு,  சீனிவாஸ், சந்திர சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Thirupathy Thirumalai Tiruppam Tharuma

    திருப்பதி திருமலை ஏழுமலையான், பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். ஏழுமலையான் குறித்த புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம். புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது, இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. 

    திருப்பதி திருமலை மகான்கள் நிறைந்த பூமி என்பதால்,அருளாசி நிறைந்து காணப்படுகிறது .திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல , திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சனை தீரும். துக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .

  • Thirupathy Thirumalai

    பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கைழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.

    மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் திருமலை திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

    இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

    திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.
     

  • Thirupathy Thirumalai Alaya Sirappugal

    பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கைழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.

    மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் திருமலை திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

    இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

    திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.
     

  • Thirumalai Erum podhu Solla vendiya mandiram

    திருமலை திருப்பதி செல்வோர், மலை ஏறும் போது அந்த வேங்கடவனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லிக் கோண்டே  மலையேறினால் நம் தீராத வினையெல்லாம் தீர்த்திடுவான் திருவேங்கடத்தான். 

    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித

    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ

    தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம

    க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ

    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

    பொருள் :
    பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.