Tag: Thirukalyanam

  • Tiruvarur | Enkan Arulmiku Adinarayanaperumal Thirukalyanam

    திருவாரூர் | எண்கண் அருள்மிகு ஆதிநாராயணபெருமாள் திருக்கல்யாணம் 

     

  • Madurai meenatchi thirukalyanam

    மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண நிகழ்விற்கான கட்டண அனுமதி சீட்டினைப் பெற, நேரடியாகவும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்….
    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வினை காண வரும் பக்தர்கள், 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500/- கட்டணச் சீட்டு, 2500 பேருக்கும் மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டு 3200 பேருக்கும் வழங்கப்படவுள்ளது. பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதளத்திலும், மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியின் அலுவலகத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

    முன்பதிவு செய்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மற்றும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகளவிற்கு முன்பதிவு செய்தால், கணினி முறை குலுக்கல் நடத்தி, பின்னர் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனத்திற்கு வருகை தரக்கூடியவர்களில் முதலில் வருகை தரக்கூடியவர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்பதிவிற்கான விண்ணப்ப படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், 500 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபருக்கு இரு அனுமதி சீட்டும், 200 ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3 அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து, தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 13-ம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • November 10 mururgan thirukalyanam

    நவம்பர் 10 முருகன் திருக்கல்யாணம்
    பிலவ வருடம் – ஐப்பசி 24
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    முருகன் திருக்கல்யாணம்
    10-நவ-2021 புதன்  ரபியுல் ஆகிர்4
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    2.25
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    9.50
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Karaikkal Amayar Thirukalyanam

    பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் இன்றி எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்தள்ளது பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வழக்கமாக லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    ஆனால் இவ்வாண்டு கோவிட்-19  ஊரடங்கு காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் மிக எளிமையாக பக்தர்கள் இன்றி ஆலயத்தின் உள்ளேயே நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் ஆலய அறங்காவல் குழுவினர் அறிவித்திருந்தனர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 

    இவ்விழாவையொட்டி இன்று காரைக்கால் அம்மையாருடைய வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர். 

     

    காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம்….

    Posted by shakthionline.com on Thursday, July 2, 2020

    இந்த நிகழ்ச்சியில்  பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் சிவாச்சாரியார்களின் உதவியாளர்களும் ஆலய சிப்பந்திகளுடன் எளிய முறையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.  

    இவ்விழாவில்  சமூக இடைவெளி பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் திருக்கல்யாணத்தில் பங்கேற்று காரைக்கால் அம்மையாரை தரிசித்தனர். மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்வு நாளை மறுநாள் (ஜீலை 04-ம் தேதி) நடைபெற உள்ளது. 

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது. பக்தர்கள் ஆலயத்தில் நடைபெறும் இந் நிகழ்வுகளை நேரடியாக தங்களின் வீடுகளில் இருந்து  இணையதளம் *http://www.karaikaltemples.com* யூடியூப்:- *karaikal temple* மூலம் நேரடியாக சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Thanjai thirukalyanam

    உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையாருக்கும் _ பெரியநாயகி அம்மனுக்கும்  திருக்கல்யாணம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் – பார்வதி  திருக்கல்யாணத்தை பார்த்து பரவசம் அடைந்தனர். 

    நாட்டிலேயே மாபெரும் கற்கோயிலாகத் திகழும்,   ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்று இரவு பெருவுடையாருக்கும் – பெரியநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது

    திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி,  விரைவில் திருமணம் நடைபெறவும்,  குழந்தை இல்லாதவர்களுக்கு  குழந்தை பாக்கியம் உன்டாகவும்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பக்தர்கள் பழங்கள், குங்குமம் ,மஞ்சள் கிழங்கு, திருமங்கல்ய சரடு,  வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் ஆயிரக்கணக்காள பக்தர்கள் பங்கேற்றனர். 

  • Karaikaal Ammayar thirukalyanam

    பரமதத்தருக்கும் – புனித வதியார் என்கிற காரைக்காலம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமானோ பங்கு பெற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்…..வீடியோ காட்சி…. 

  • Srinivasa Perumal Thirukalyanam

    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவேங்கடபுரம் தசரத நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக் கல்யாண வைபோகம் தசரத நகரில் நடைபெற்றது.  

    முன்னதாக திருக்கல்யாணத்திற்கான இருபது வகையான சீர்வரிசையை பொன்னியம்மன் கோவிலிலிருந்து கிராம மக்கள் ஊர்வலமாக மணப்பந்தலுக்கு கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து உய்யாளிசேவையும், மாலை மாற்றும் சடங்கும், பூப்பந்து எறிதல் சடங்கும் நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் யாகம் வளர்க்கப்பட்டு கெட்டிமேளம் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீதேவி பூதேவியர்க்கு மங்கலநாண் சூட்டப்பட்டது. 

    திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் தீப தூப ஆராதனைகள் செய்வித்து நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மங்கலநாண் மற்றும் மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னேரி, திருவேங்கடபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.