Tag: therottam

  • Karaikudi Koppuda Nayakiyamman Thirukoil Therthiru Festival

    காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா

     

  • Nellaiappar aani therottam

    பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.  காந்திமதி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயிலில் ஆனித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனி மாதத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் காட்சியைக் காண வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டு விழா நாளை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 3ம் தேதி தேரோட்டம் நடைபெற வேண்டும். திருவிழாவிற்காக பிரம்மாண்ட தேர்களும் அலங்காரத்திற்கு தயார் செய்யப்பட்டு வந்தன.

    ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆனித் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இந்த சூழ்நிலையில் திருவிழாவை நடத்துவது சரியாக இருக்காது என்று கருதி ஆனிப்பெருந்திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    500 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த தடையும் இன்றி நடைபெற்ற தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்ட பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • Thiruparankundram Therottam

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் தேரோட்டம் – பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தனர்.

    அறுபடைவீடுகளில் முதற் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26ந் தேதியுடன் கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அதனை முன்னிட்டு காலை மாலை வேளையில் ஸ்ரீ முருக பெருமான் ஸ்ரீ தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்கள்.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி முருகன், தெய்வானையுடன் தெப்பத்தில் முட்டு தள்ளு வைபவம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அலங்கரிக்கபட்ட திருத்தேரில் சுவாமி முருகபெருமான், தெய்வானையுடன் வைக்கப்பட்டு 16 கால் மண்டபத்தில் இருந்து துவங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    இவ்வைபவத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக வந்து அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் வருகிற 8 ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டு வருகிறது.

  • Palani Thai poosa therottam

    பழனியில் தைப்பூச தேரோட்டம், நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.