Tag: theppam

  • Thiruverkadu theppam

    ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

    இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோயிலில் இருந்து பலக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

    இதில் மூன்றாம் நாளான இன்று தெப்பத்தில் 11 சுற்றுகள் கோயில் குளத்தில் சுற்றி வரப்பட்டது மேலும் பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தெப்ப உற்சவத்தை காண கோயில் தெப்ப குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  • Panai oolai theppam

    உலக பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயில் பங்குனித் தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா வரும் 20.03.2019 அன்று புதன் கிழமை மாலை 7 மணிக்கு நடைப்பெற உள்ளது.

    இந்த வருடம் 20 வருடம் கழித்து இயற்கை தெப்பமான பணை ஓலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை வடிவமைத்து வருகினர் அந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் .

     பிளாஸ்டிக் பொருட்கள் தவிற்கும் விதமாக இயற்கை மரமான பணை ஓலைகளால் செய்யப்பட்ட தெப்பம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டுகளில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேன்னர்களால் செய்யப்பட்ட தெப்பம் கட்டபட்டு வந்தது.

     ஆனால் இந்த முறை பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்து பணை ஓலையால் கட்டப்பட்ட தெப்பம் மக்களிடத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வை இந்த வருடம் உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை.