Tag: Thanjai

  • Thanjai pradhosham

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியும் பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Thanjai pradhosham

    தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை பிரதோஷ வழிபாடு….சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும், அதைப் போல் சித்திரை மாத இரண்டாம் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர்,பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Thanjai periyakoil sani maha pradhosham

    சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்களால்  அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமர்சையாக கொண்டாடப்படும். ஐப்பசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று சனி பிரதோஷமாக நடைபெற்றது. பெருவுடையாருக்கு  ஏற்ற பெருநந்திக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், அரிசிமா பொடி, கரும்புச்சாறு, சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Thanjai Periya Koil Pradhosham

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில்  பக்தர்கள் இல்லாத    ஆறாவது  பிரதோஷம் நடைபெற்றது. 13 அடி உயர மகாநந்தி பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

    கொரோனா  ஊரடங்கால் பக்தர் களுக்கு அனுமதி இல்லாததால் கோயில்  பணியாளர்கள்   மட்டுமே கலந்து கொண்டு பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    உலகில்  கொரோனா தொற்று  முற்றிலும்  குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவும்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது கொரோணா காலத்தில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும்  ஆறாவது  பிரதோஷம் இதுவாகும்.

  • Thanjai Kudamuzhukku

    தஞ்சை பெரியகோயில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. குடமுழுக்கு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. இதற்காக வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. 

    11,900 சதுரஅடி பரப்பில் 110 யாக குண்டங்கள் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.  400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தி வருகிறார்கள். நாளை காலை 7 மணிக்கு மகா தீபாராதனையும், காலை 7.25 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்த விமான ராஜகோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறும். 

     8 கால யாகசாலை பூஜைக்கும் ஆயிரம் கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக்காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாருகட்டை போன்ற 124 மூலிகை பெருட்களை பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தினந்தோறும், ஆயிரம் கிலோ அளவிலான செவந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்களும் அபிஷகேத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 
     

  • Thanjai Kudamuzhukku

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருகின்ற 5 ந்தேதி குடமுழுக்கு நடத்தப்பட இருக்கின்றது.  அதற்கான பணிகளை தொல்லியல் துறையினரும்  இந்து சமய அறநிலையைத்துறையினரும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    குடமுழுக்கிற்காக கோவில் அருகே 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மகா யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 110 யாககுண்டங்களில் 300 சிவாச்சாரியார்கள் அமர்ந்து யாகம் செய்யக்கூடிய வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 

    இன்று காலை பூர்வாங்க பூஜையுடன் சிவனடியார்களும் , தமிழ் ஓதுவார்களும் கலந்து கொண்டு மகா யாக சாலையில் யாகங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 கால பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள்  வருகின்ற 5 ந்தேதி வரை யாக சாலை நடைபெறும். 

  • Thanjai Paeriya koil kodimaram

    40 அடி உயர பர்மா தேக்கு மரத்தில் தயாரான புதிய கொடிமரம்  தஞ்சை பெரிய கோயிலில் நிறுவப்பட்டது.

    உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பெரிய கோயிலை புனரமைக்கும் பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், பெரிய கோயிலில் பெருவுடையாரை நோக்கி நிற்கும் பழைய கொடிமரம் பழுதானதையடுத்து 40 அடி உயரத்திலான பர்மா தேக்கு மரத்தில் கொடிமரம் செதுக்கப்பட்டு இன்று சிறப்பு பூஜைகளுடன் நிலை நிறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பூர்வாங்கப் பூஜை களுடன் குடமுழுக்கு பூஜைகள் துவங்கின. பெரிய கோயில் குடமுழுக்கிற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரி மாணவர்கள் தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள அரசு சுவர்களில் தெய்வ திருமேனி உருவங்களை வண்ண வண்ண ஓவியங்களாக மாணவர்கள் தீட்டி வருகின்றனர். 

  • Thanjai Annabishegam

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில்  சிவனுக்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தாலும் 500 கிலோ காய்கறிகளாலும் "அன்னாபிஷேகம் " நடைபெற்றது. 

    உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும்

    பக்தர்களால் வழங்கப்பட்ட 1000 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தால் 13 அடி உயரமுடைய சிவலிங்கத்துக்கு  இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது  கேரட்,  பீட்ருட், முள்ளங்கி உள்ளிட்ட 500 கிலோ எடையிலான அனைத்து வித காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக வழிபாட்டில் பங்கேற்று சிவபெருமானை வணங்கினர்

    இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று முடிந்ததும் 13 அடி சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னத்தில் ஒரு பகுதியை பக்தர்களுக்கு பிரசாதமாகவும்,  மீதமுள்ளதை ஆறுகள் குளங்களில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவுக்காகவும் நீர் நிலைகளில் கரைக்கப்படும்

  • Thanjai Annabishegam

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை  அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. 

    பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும். திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாமல் உள்ள பெண்கள் இந்த அன்னத்தை உட்கொண்டால் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கணேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

  • Thanjai thirukalyanam

    உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையாருக்கும் _ பெரியநாயகி அம்மனுக்கும்  திருக்கல்யாணம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் – பார்வதி  திருக்கல்யாணத்தை பார்த்து பரவசம் அடைந்தனர். 

    நாட்டிலேயே மாபெரும் கற்கோயிலாகத் திகழும்,   ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்று இரவு பெருவுடையாருக்கும் – பெரியநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது

    திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி,  விரைவில் திருமணம் நடைபெறவும்,  குழந்தை இல்லாதவர்களுக்கு  குழந்தை பாக்கியம் உன்டாகவும்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பக்தர்கள் பழங்கள், குங்குமம் ,மஞ்சள் கிழங்கு, திருமங்கல்ய சரடு,  வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் ஆயிரக்கணக்காள பக்தர்கள் பங்கேற்றனர்.