Tag: Thai amavasai

  • January 31 2022 Thai Amavasai

    ஜனவரி 31 – தை அமாவாசை
    பிலவ வருடம் – தை 18
    அமாவாசை 
    31-ஜன-2022 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    1.58
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    10.10
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • thai amavasai vazhipadu

    தை மாதத்தில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்தத் தை மாதம். அதனால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது.

    தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    தர்ப்பணம் கொடுக்கும்போது செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

    முன்னோர்களுக்குத் தர்ப்பணம் எவ்வாறு கொடுப்பது?

    நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் நமக்குக் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    அதுவும் காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அதேபோல் மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனால் ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.

    தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களைக் கூற வேண்டும்.
     

  • Thai amavasai endral enna

    ஆடி அமாவாசை அன்று பிதுருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளாய அமாவாசை (புரட்டாசி அமாவாசை) அன்று பிதுருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.

    தை அமாவாசை தர்ப்பணம் எங்கெல்லாம் கொடுக்கலாம்?

    பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது.

    தர்ப்பணம் என்றால் என்ன?

    அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.

    சிரார்த்தம்:
    ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் எனலாம்.

    தை அமாவாசை ஐனவரி 31 (தை 18) திங்கட் கிழமை அன்று வருகிறது. ஜனவரி 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.
     

  • February 11 Thai Amavasai

    பிப்ரவரி 11 – தை அமாவாசை
     சார்வரி வருடம் – தை 29
     அமாவாசை 
    தை அமாவாசை
    11-பிப்-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    1.01
    நட்சத்திரம்    :    திருவோணம்    ம    2.35
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • January 23 Thai Amavasai

    ஜனவரி 24 – தை அமாவாசை
    விகாரி வருடம் – தை 10
     அமாவாசை 
    தை அமாவாசை
    24-ஜன-2020 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    3.31
    நட்சத்திரம்    :    உத்திராடம்    ந.இ    3.17
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thai amavasai

    தை அமாவாசை…. நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய முக்கிய நாளாகும். தை அமாவாசை என்பது உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆகம். இதேபோல தட்சணாயண புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை. தை மற்றும் ஆடி அமாவாசைகள் இரண்டும் முக்கியமான அமாவாசை நாள்கள். 

     இந்த அமாவாசை நாள்களில் நமது முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜையை ஏற்று, நமது முன்னோர்கள் மகிழ்ந்து நமது துன்பங்களை நீக்கி நன்மை அளிக்கின்றனர்.

    தை அமாவாசை நாள் அன்று தர்ப்பணம் கொடுக்க சில இடங்கள் …. 
    அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் இராமேஸ்வரம், முன்ஜென்மப் பாவங்கள் போக்கும் திருப்புல்லாணி, வேதாரண்யம் கோடியக்கரை, பூம்புகார், இராம – இலக்குவர்கள் பிண்டம் வைத்து வழிபட்ட திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, குடந்தை மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி, குமரிக்கடல் சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறில் உள்ள பஞ்சநதிக்கரை ஆகியவையும் அவற்றின் தீர்த்தங்களும் பிதுர்களின் ஆன்ம பூஜைக்கு உரிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.

    தமிழகத்தைப்போல் வட இந்தியாவில் காசி, பத்ரி, கயா போன்ற இடங்களும், கேரளத்தில் உள்ள பாரதப்புழா என அழைக்கப்படும் நதி ஓரத்தில் உள்ள ஐவர் மடம் ஆகியவையும் எக்காலத்திலும் சென்று பிதுர் வழிபாடு செய்யும் வகையில் அமைந்துள்ள திருத்தலங்கள்.

    அங்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் வீட்டு அருகில் உள்ள கோயிகளில் அல்லது கோயில் குளத்தில் தர்ப்பணம்