Tag: Tamil New Year

  • Tamil New year

    சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இரவு 8.23 மணிக்கு பிறந்தது. தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வருவது சித்திரை மாதம். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தார். சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக அவதாரம் எடுத்தார். சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும். சித்திரை முதல்நாளில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

    புத்தாண்டு தினத்தில் வாசலில் அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும் அழகு செய்யலாம். கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும். காலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.

    காலையில் நம் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்ய முடியாதவர்கள் பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.

    மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும். வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் என்பதை சொல்லும் வகையில் இந்த உணவை சாப்பிடலாம். 
     

  • Tamil New Year

    வட இந்தியாவில் குப்தர் வம்சத்தை சேர்ந்த 2-வது சந்திர குப்தன் தமது பெயரை விக்கிரமாதித்தன் என மாற்றிக் கொண்டு தமது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்குகிறான். அதனடிப்படையில்தான் விக்கிரமசகம் எனும் 60 ஆண்டு முறை உருவாகிறது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடியும். இந்த 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்.

    உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.

    இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.

    சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
    திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேச்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் உலா புறப்பட்டு, ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.

    ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும். வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம். திருவில்லிப்புதூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில் ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.

    சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப் பகுதிக்கே உரித்தான சித்திரா நதியில் நீராடி விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும் விசேஷமானது.

    இயற்கையின் திருவிளையாடல்
    மாசி-பங்குனி மாதங்களில், மரங்களிலிருந்து இலைகள் அதிகமாக உதிரும். ஆயின், சுக்ல பக்ஷ பிரதமை நாள் நெருங்கும்போதே, புதிய துளிர்கள் துளிர்த்து, மொட்டுகள் அரும்பி, வசந்தத்தின் வண்ண விளையாட்டு, தலைகாட்டத் தொடங்கிவிடும்.

    சாந்த்ரமான யுகாதியைக் கணக்கெடுத்தால், அன்று தொடங்கி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப் பெறும் முதல் விழா வசந்த நவராத்திரியாகும். துர்க்கையை வழிபடும் விழா. இளவேனில் காலத்து விளைச்சல் நன்கமையவேண்டுமென அம்பிகையை பிரார்த்திக்க வேண்டும்.

    இதே வகையில், ஆண்டின் முதல் நாளில் தொடங்கி, ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு ஒருவராக, ஸப்த ரிஷிகளையும் வழிபடவேண்டும்.
     

  • April 14 – Tamil New Year

    ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
    விகாரி வருடம் – சித்திரை 1
    தமிழ் புத்தாண்டு
    14-ஏப்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    நவமி    கா    6.31
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    3.08
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Tamil New Year vepampoo Pachadi

    தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில்  ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும் என்பதை உணர்த்தும் விதமான வேப்பம்பூ பச்சடி அன்றைய உணர்வில் சேர்க்கப்படுகிறது. 

    வேப்பம்பூ பச்சடியை செய்யும் முறை ….
    தேவையானவை:
    மாங்காய் : 2
    வெல்லம் : தேவையான அளவு
    வேப்பம்பூ : சிறிதளவு
    உப்பு : தேவையான அளவு
    பச்சைமிளகாய் ; 5

    செய்முறை:

    மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாற வேண்டும். 
     

  • Tamil New Year Wishes

    சித்திரை 1 …. உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் சித்திரை 1 ஆம் தேதி, அரசு விடுமுறை அளித்து வருகிறது. 

    தமிழர்களின் நாட்காட்டியில் அமைந்துள்ள முதல் மாதமான சித்திரையின் முதல் நாளை ’புது வருஷம்’ என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் அழைக்கின்றனர்.

    அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். 

    தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்காரத் தோரணமிடுவர். இதையடுத்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். பின்னர் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வர். 

    தமிழ்ப்பத அன்றைய வழிபாட்டின் போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர். அதேபோல் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுளின் படத்தின் முன்பு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.

    ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு விளம்பியில் பிறந்தது. இந்தாண்டு என்ற விகாரி என்ற பெயரில் பிறந்துள்ளது.