Tag: Story

  • Navarathiri vuruvana story

    நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டி ற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம் பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தி னர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகி ழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமா க பெறும் நன்னாள் இது.

    ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையு டன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். 

    பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன் று விடமுடியாது என்றுமகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான். நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்த மாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

    எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷ னை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந் து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

    “போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடு வான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும் படி நடந்து சென்றாள்.

    சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தி யை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரை தான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனி ன் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

    இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியி டம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலை யை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். 

    மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசு ரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினா ர்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.
     

  • Pancha muga anjaneyar story

    குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்ட ஆஞ்சநேயரை சில கோயில்களில்- விக்கிரகங்களாகவும், வீடுகளில் வண்ண படங்களாகவும் காணலாம் இந்த வடிவம் தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

    இப்படி, மகிமை மிகு ஐந்து திருமுகங்களுடன் அனுமன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் கதை இது:

    யுத்தத்தில் கணக்கிலடங்காத தன் போர் வீரர் களை இழந்த ராவணனுக்கு, ‘ஸ்ரீராமனால் தானும் கொல்லப்படுவோமோ?’ என்ற பயம் எழுந்தது. எனவே, அவன் பாதாள உலகின் வேந்தனான மயில்ராவணனை வரவழைத் தான். பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன் மயில்ராவணன். மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

    தன்னை வணங்கிய மயில்ராவணனிடம் தனது நிலையை எடுத்துக் கூறி, ராம.லட்சும ணரை அழிக்கும்படி உத்தரவிட்டான் ராவ ணன் அவன் கட்டளையைச் சிரமேற் கொண்ட மயில்ராவணன், ராம-லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட் டான்.

    விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாதுகாக்கும் படி அனுமனிடம் கூறினார். அனுமன், ராம- லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி, தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் புரிந்தார்.

    விபீஷணரின் உருவெடுத்த மயில்ராவணன், அனுமனிடம் வந்தான். ராம.லட்சுமணரைப் பார்த்து வருவதாகக் கூறி உள்ளே சென்றவன் தனது மாய சக்தியால் அவர்களைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

    ‘‘மாருதி ஜாக்கிரதை,  மயில்ராவ ணன் என் உருவத்தில்கூட இங்கு வர முயற்சி ப்பான்.." என்று அனுமனை எச்சரித்து  புறப்பட்டான். பாதாள லோகம் வந்த மயில்ரா வணன், ராம- லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.

    மயில்ராவணன் சென்ற பிறகு உண்மையான விபீஷணர் அனுமனிடம் வந்தார். ‘‘இப்போது தானே வந்து போனீர்கள்!’’ என்று அவரிடம் வினவினான் அனுமன். தான் வரவில்லையே என்றார் வீபிஷணர்.

    அனுமன் பதற்றத்துடன் பர்ணசாலைக்குள் சென்று பார்க்க அங்கே ராம- லட்சுமணர் இல்லை.  இது மயில் ராவணனின் வேலையே என்று உணர்ந்தார். அவரிடம் மயில் ராவணன து இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹி ராவணன் பற்றியும் சொன்னார் விபீஷணன். 

    ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும், அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.

    அதன்படி பாதாள லோகம் சென்ற ஆஞ்சநே யர், அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்கு பின்னால் மறைந்து கொண்டார்.

    மயில்ராவணனும் மஹிராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம- லட்சுமணரை அழைத்து வந்தனர். அப்போது, ‘‘மயில்ராவணா உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வர வேண்டாம்!’’ என்று காளிபோல குரல் கொடுத்தார் அனுமன்

    அதன்படி ராம- லட்சுமணருடன் மஹிராவண ன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார். பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம- லட்சுமணர்களிடம் கொ டுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி வேண்டினார்.

    நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந் தேகம் கொண்ட மயில்ராவண ன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ராம- லட்சுமணர்களை தன் தோள்களில் அமர செய்து மயில்ராவணன் மீது அம்பு களைத் தொடுக் கச் செய்தார் அனுமன். 

    மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான். போ ரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன், ராம- லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார். அவர்களிடம் போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுக ளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன்.

    விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார். அங்கு தன்னை எதிர் த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாம ரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பினார்.

    ‘ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!’ என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன். அப்படி முடியா விட்டால், கொல்ல முயல் பவரே மடிய நேரிடும். 

    அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்க ளோடு விசித்திர உருவெடுத்தார். இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான். 

    ஆஞ்சநேயர் அவனிடம், ‘‘அதர்ம வழிகளில் சென்ற அரக்கனே, நீ அழியப் போகும் நேரம் வந்து விட்டது’’ என்று கூறி, பெட்டியைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்க ளின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன. 

    மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான். பிறகு ராம- லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந் தார். வானர சேனைகள் மகிழ்ந்தன. பிறகு நடந்த போரில் ராவணன், ஸ்ரீராமரால் கொல்லப்பட்டான். ‘ஸ்ரீராமருக்கு வெற்றி’ என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

    மயில்ராவணனின் பிராணன் வாயு சொரூப மானதால், தன் உயிரை பறக்கும் ஐந்து வண்டுகளாக மாற்றிக் கொள்ள பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தான். ஒரே நேரத்தில் ஐந்து வண்டுகளையும் எவரா லும் பிடிக்க முடியாது என்று இறுமாந் திருந்தான்.  சகல சக்திகளையும் பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர், ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் பாய்ந் து பிடித்ததுடன் அவை எங்கு சென்றாலும் அவற்றைக் கொல்லும் வல்லமை படைத்த பஞ்ச முகங்களுடன் உருவெடுத்தார். 

    தாவித் தாவிச் செல்ல வானரம், ஆகாயத்தில் பறக்க கருடன், பாய்ந்து செல்ல நரசிம்மம், பூமியில் ஓட குதிரை, பாதாளத்தினுள் நுழைய வராஹம் என ‘பஞ்சமுக ஆஞ்சநேயராக’ உருவெடுத்து மயில்ராவணனை அழித்தார்.

    பஞ்ச இந்திரியங்கள் இழுத்த இழுப்புக்கெல் லாம் போய் துயரப்படும் நாம், மகிமை மிக்க பஞ்சமுக ஆஞ்சநேயரை தியானித்து வழி பட்டால் தைரியம், பலம், பெரும் புகழ், புத்திக் கூர்மை, ஆரோக்கியம், நல்ல எண்ணங்கள், மன நிம்மதி, குடும்ப  ஒற்றுமை, நல்லுறவு ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

  • Anaaya nayanaar story

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    எம்பெருமான் 
    பக்தர்களைச்
    சோதித்து 
    இடர் தந்து 
    துயர் நீக்கியே ஆட்கொள்வார் என நினைப்போர்க்கு 
    ஆனாய நாயனார் புராணம் 
    ஆதி பகவனின்  
    அருட் பெருமையை பெருங்கருணையை விளங்கச் சொல்லும்.
    பெருமிதம் கொள்ளும்.

    திருவிளையாடல் 
    ஏதும் இல்லாமலேயே 
    சிவபுரிக்கு சிவனாலேயே
    அழைத்துச் செல்லப்பட்ட பெருமை கொண்டவர் ஆனாய நாயனார்.

    எல்லா வளங்களும் நிறைந்திருக்கும் சோழநாட்டின் உட்பிரிவுகளில் ஒன்று அருள் வளமிக்க 'மழநாடு.'

    அங்கு 
    மேல் மழநாட்டில் 'திருமங்கலம்'
    என்றொரு பெருமங்கலம்.

    திருமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டவரின் திருநாமம் சாமவேதீஸ்வரர்.

    வீணை ஓசையும் 
    வேத ஓசையும் 
    வேய்ங்குழல் ஓசையும் வெண்சங்கு ஓசையும் நிறைந்திருக்கும் யாத்திரைத்தலமே திருமங்கலம்.

    வேய்ங்குழல் என்பது வேறொன்றுமில்லை கார்வண்ணன் கையிலிருக்கும்
    புல்லாங்குழலே. 

    ஆயர் குலம் செய்த 
    பெரும் தவத்தால் அக்குலத்தில் அவதரித்தார் 
    ஆனாய நாயனார்.

    ஆனாயர் என்பதே காரணப் பெயர்தான். ஆனிரை காப்பதால் அப்பெயர் வந்தது.

    மிக உறுதி வாய்ந்த சிவபக்தரான ஆனாயர் சிவபெருமான் அன்றி வேறு ஒன்றையும் விரும்பாதவர்.

    தூய ஒளி வீசும் வெண்ணீறை விரும்பும் திருத்தொண்டர்.

    ஐந்தெழுத்தை எப்போதும் ஓதும் சிந்தனையினர்.  அன்பும் அறனும் 
    இரு கண்ணெனக் கொண்டவர்.

    சிவனடியார்களைப் பேணுவதில் 
    சிறந்தோங்கியவர்.

    சிவனடியார் 
    எக்குலத்தவர் ஆயினும் ஆழ்ந்த பக்தியோடு உபசரிக்கும் உன்னதர்.

    ஆயர்குலத் தலைவராக விளங்கிய 
    ஆனாயர் 
    திருமங்கலம் உறை
    சாமவேதீஸ்வரருக்கு அனுதினமும் 
    பால் மோர் நெய் பஞ்சகவியம் 
    திருநீறுக்குச் சாணம் தருவதைச்
    சிவப் பணியாகக் கருதி செய்து வந்தார்.

    அவர் வீட்டைச்சுற்றி 
    கன்று பசு எருது என ஆனிரைகள் நிறைந்திருக்கும்.

    கன்றுகள் 
    பால் கறவை மாறிய பசுக்கள் 
    பால் சுரக்கும் பசுக்கள் சினைப் பசுக்கள் 
    இளம் கன்றுடைய பசுக்கள் 
    வலிய எருதுகள் என தனித்தனி தொழுவத்தில் அவை கட்டப்பட்டிருக்கும்.

    இளம் கன்றுகள் 
    வயிறு முட்ட தாய்ப்பசுவிடம் 
    பால் குடித்த 
    பின்னர் தான்
    இறைவனுக்கும் அடியார்க்கும்
    உற்றார் உறவினருக்கும் பால் கிடைக்கும்.

    கோமாதாவிற்குப் 
    பணி செய்வதற்கென்றே 
    பல கோவலர்கள் 
    ஆனாயர்
    ஏவலுக்கு காத்திருப்பர்.

    அனுதினமும் ஆனிரைகளை 
    ஏவலர்கள் 
    அருகிருக்கும் 
    முல்லை நிலத்திற்கு அழைத்துச் சென்று 
    புல்மேய விடுவர்.

    உடன் செல்வார் 
    ஆனாயர் 
    சிவ நாமம் 
    உச்சரித்த படியே.

    ஆனிரைகளுக்கு 
    அருந்த தூயநீர்
    உரிய நேரத்தில் இளைப்பாற மர நிழல்
    பொல்லா விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு
    முதலானவற்றை முழுமனதோடு இன்னொரு ஏவலராய் கண்காணிப்பது
    ஆனாயரின் 
    அன்றாடப் பணி.

    அதை சிவப்பணி 
    எனச் செய்வார்.
    காரணம் 
    அவை தரும் 
    பாலும் மோரும் 
    தயிரும் நெய்யும் சாணமும் கோமியமுமே அவர் சிவபூஜைக்கு தினம்தோறும் அனுப்பிவைக்கும் நிவேதனப் பொருட்கள்.

    இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் 
    சிவப்பணிக்கும் சிவனடியாருக்குமே செலவிடுவார்.

    ஆனிரைகளோடு 
    வீட்டை விட்டுப் 
    புறப்படும் போது நெற்றியில் திருநீறு சிவார்ப்பணக் கோலம் ஒரு கையில் வெண்கோல்
    இன்னொரு கையில் வேய்ங்குழல் என தெய்வீகமாகக் காட்சியளிப்பார்.

    கோவலர்களிடம் 
    வேலை வாங்கவும் தானே வேலை செய்யவும் தெரிந்த அவரிடம் ஒரு கலை கைவசம் இருந்தது.

    ஆம்…
    அருமையாக 
    வேய்ங்குழல் வாசிப்பார்.

    அவரது 
    புல்லாங்குழலிசை 
    இசை நூல் இலக்கணம் கொண்டது.
    ஐந்தெழுத்தைத் தன்னகத்தே கொண்டது.

    பஞ்சாட்சரத்தை 
    ஆனாயர்
    ஏழிசையில் 
    சுருதியோடு இசைக்கும்போது குழலிசை காடெங்கும் 
    இனிமையாய்ப் பரவி 
    சிவ மணம் பரப்பும்.

    சகல சராசரங்களும் வசமிழந்து உருகி நிற்கும்.

    திருமங்கலத்தில் குடிகொண்டிருக்கும் சாமவேதீஸ்வரரே
    மயங்கிப் போவார். 

    இப்படித்தான்-
    ஒரு கார் காலத்தில் 
    ஒரு நாள் 
    ஆனாயர்
    ஆனிரைகளை 
    மேய்த்த வண்ணம் சென்று
    கொண்டிருந்த போது 
    கொன்றை மரம் 
    ஒன்றைக் கண்ணுற்றார். 

    மாலை போல் நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கி நிற்கும் 
    கொன்றை மரம் ஆனாயருக்குத் 
    தாழ்கின்ற சடையினை உடைய 
    சிவபிரான் போல் காட்சியளித்தது.

    அருகிலே சிவன்.
    அவரோ இசைஞானி.
    கையிலே குழல் வேறு. 

    பக்தியில் லயித்தவர் 
    பஞ்சாட்சரத்தை பரவசத்துடன் 
    வாசிக்க ஆரம்பித்தார்.

    குழல் வாயும்
    தன் வாயும் 
    இணைந்தொழுக 
    இசை வடித்தார்.

    காந்தர்வ வேதத்தில் சொல்லியிருந்தபடி செய்யப்பட்டிருந்த வேய்ங்குழல் 
    ஆனாயர் 
    விரல் துள்ளலில் 
    தெய்வீக இசையாக ஒலிக்க ஆரம்பித்தது.

    அந்த இசை 
    தேன்கலந்து அல்ல தேவாமிர்தம் கலந்து அனைத்து ஜீவராசிகளின் செவிகளிலும் பாய்ந்தது.

    அக் குழலோசை 
    அசையாததை 
    எல்லாம் அசைத்தது. அசைந்ததை எல்லாம் அசையாதிருக்கச்  செய்தது.

    பசுக்களும் கன்றுகளும் தமை மறந்து போயின. பறவைகள் பரவசம் அடைந்தன.

    தாளத்திற்கு ஏற்ப மயில்கள் 
    தோகை விரித்தாடின.

    விலங்குகள் மதிமயங்கி கிறங்கி நின்றன.

    மான்களும் சிங்கங்களும் யானைகளும் புலிகளும் மனங்களைப் பறிகொடுத்து 
    மயிர் சிலிர்த்துக் குதூகலித்தன.

    ஆறுகளும் அருவிகளும் மேலும் பாயாமல் 
    கீழும் விழாமல் 
    தம் இயல்பிசை மறந்து
    குழலிசை கேட்டன.

    கடலலைகள் 
    அசைவற்று ஓய்ந்தன.

    ஒரு கட்டத்தில் 
    மான்களும்-புலிகளும், யானைகளும்- சிங்கங்களும், 
    பாம்புகளும்-கீரிகளும் பகைமை மறந்து 
    ஒன்றன் மீது 
    ஒன்றாக ஓடி விளையாடின.

    துன்புறுத்துவோரும் துன்புறுவோரும் ஒன்றுபட்டுக் கூத்தாட காடெங்கும் 
    அமைதி பூத்தது.

    ஏவலுக்கு காத்திருந்த கோவலர்கள் பணி மறந்து இன்பத்தில் துய்த்தனர்.

    விண்ணுலகிலிருந்து வித்யாதரர்களும் கின்னரர்களும்
    தேவர்களும்  
    தேரில் வந்து இறங்கி நேரில் அருகில் வந்து 
    ராக தேவனை
    ரசித்த வண்ணமிருந்தனர்.

    இசைக்கு 
    மயங்காதோர் உண்டோ?

    உலகில் 
    முதன்முதலில் வேய்ங்குழல் இசைத்தவர் முருகப்பெருமான்.

    அடுத்து 
    புல்லாங்குழல் வாசித்து அகிலத்தைக் கவர்ந்தவர் கண்ணபிரான்.

    இப்போது 
    ஆனாயர்.
     
    கடவுளரையும் கவர்ந்திழுக்கும் புல்லாங்குழல் இசை.

    ஆனந்தத் தாண்டவமியற்றும் ஆண்டவனையே 
    அருகில் வரவழைத்தது அவரது குழலிசை.

    நேர்மையான பக்தி நேர்த்தியான குழலிசை பஞ்சாட்சர மந்திர மகிமை இறையனாரின் உள்ளத்தை உருக்கி ஆனாயர் முன் 
    தோன்ற வைத்தது.

    பேரொளி சூழ
    குழலிசை தொடர
    அன்னை பார்வதியோடு எழுந்தருளிய 
    அப்பன் பரமசிவன் ஆனாயருக்குக் காட்சியளித்தார்.

    "தெய்வீக இசைஞானியே!

    வேங்குழல் இசையால் எம்மை மகிழ்வித்த ஆனாய  நாயனாரே!

    எம்மீது அன்பு கொண்ட அடியார்கள் 
    எப்போதுமே 
    உன்னுடைய குழலிசையைக் கேட்பதற்கு ஏதுவாக இப்போதே இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்து வருவாயாக !"

    என ஆனாய நாயனாரை அன்போடு 
    அழைத்துக் கொண்டு கயிலாயம் புறப்பட்டார் கொன்றை நாதன்.

    தேவர்கள் 
    கற்பக மலர் மாரி பொழிந்தனர்.
    முனிவர்கள் 
    மறைமொழி துதித்தனர்.

    ஆனந்தக் கூத்தனுடன் ஆனாய நாயனார் பொன்னம்பலம் புகுந்தார் புல்லாங்குழல் 
    இசைத்தவாறே !

    'அலை மலிந்த புனன் மங்கை ஆனாயர்க்கு அடியேன்'
    -சுந்தரரின் திருவாக்கு.

    திருச்சிற்றம்பலம்.

  • Manakanjara nayanar story

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஆறு வகை 
    ஆகம நூல்களைக்
    கற்றுணந்தோர் 
    புகழ்ந்து பாடும் ஊர் கஞ்சாறூர்.

    சோழநாட்டில் 
    கஞ்சாறூரில் கொம்புத்தேன் சாறும் கரும்புச்சாறும் 
    நிறைந்து விளங்கியதால் கஞ்சாறூர் என காரணப்பெயர் பெற்றது.

    கஞ்சாறுரில் 
    வேளாளர் குலத்தில் தோன்றி
    சேனாதிபதி 
    பொறுப்பில் இருந்தவர் மானக்கஞ்சாறனார்.

    இவருக்கு 
    மான காந்தன் 
    என்ற பெயரும் உண்டு.

    சுந்தர மூர்த்தி நாயனாரின் சமகாலத்தவர்.
    சிவ பக்தி மிக்கவர்.
    சிவ பக்தர்களை வழிபடுவதும் 
    அவர்களை உபசரிப்பதும் சிவபெருமானுக்கே செய்யும் உயர் வழிபாடு என்ற கொள்கையாளர்.

    சிவ பக்தர்களின் பார்வையைக்
    கவனித்த கணமே அவர்கள் மனதில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் கேட்காமலேயே 
    வாரி வழங்கும் வள்ளல்.
    மானக்கஞ்சாறனார்.

    எல்லா பேறுகளையும் பெற்றிருந்த அவருக்கு பிள்ளைபேறு மட்டும் அமையவில்லை.

    அவரும் மனைவியும் 
    கடும் விரதம் பூண்டு கங்கைகொண்டானை 
    சிலகாலம் தொழுது 
    ஒரு பெண் மகவைப் பெற்றனர்.

    அப்பெண் குழந்தை 
    சிறிய வயதிலேயே
    அறிவாற்றல் கொண்டதாகவும் ஒப்பில்லா அழகுடையதாகவும் 
    சிவ பக்தையாகவும் விளங்கியது.

    வளர வளர 
    அழகும் 
    அறிவும் 
    பக்தியும் கூடின.

    பருவ வயதை 
    எட்டிய போது 
    பாவாடை தாவணியில் கால்கொலுசு ஒலியோடு போட்டி போட்டுக்கொண்டு அவள் 
    அன்னம் போல் நடந்ததை
    ஊரே கண்டு வியந்தது.

    முகப்பொலிவும் 
    சுருள் சுருளாய் தலைமுடியும்
    அவள் முகமொழியை
    பேரழகியென பறைசாற்றின.

    சேல் போன்ற விழியும் பால்போன்ற மொழியும் கொண்ட அவளைப் பார்த்து ஊரார் கண்படுமே என அவள் தாய் அஞ்சி சங்கு வெண்குழையணிந்த சங்கரனை 
    வேண்டியபடி தவம் இருப்பாள்.

    பருவ வயதில் 
    செம்மணித் தீபம் போல கன்னிப்பெண்ணொருத்தி இருந்தால் 
    திருமண வாய்ப்புகள் பல வரத்தானே செய்யும் ?

    வந்தது.

    மானக்கஞ்சாறனார்
    ஒத்த குடியையும் அவரையொத்த  சேனாதிபதி பதவியில் இருந்தவருமான பெருமங்கலக்குடி ஏயர்கோன் கலிக்காமனார்
    எனும் இளம் காளையிடமிருந்து மணமுடிக்கத் 
    தூது வந்தது. 

    கலிக்காமனாரும் திருநீலகண்டராகிய சிவபெருமானிடத்தில் இடையறாத அன்பு கொண்டவர்.

    பெண் கேட்டு வந்த மூத்தவர்களை 
    வரவேற்று உபசரித்து ஜோதிடரை அழைத்து கட்டம் பார்த்து சிவபிரானிடம் உள்ளத்திலேயே உரையாடி 
    சம்மதம் பெற்று 
    'சரி' என்றார் மானக்கஞ்சாறனார்.

    திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக இருதரப்பிலும் 
    ஊர் வியக்க
    நடந்து கொண்டிருந்தன.

    கஞ்சாறூரும் தெருக்களும் 
    கஞ்சாறனார் வீடும் மங்கள இசை ஒலிக்க திருமணச் சூழல் 
    களை கட்டியிருந்தது.

    அது நேரம் 
    ஒரு பழுத்த சிவபக்தர் 
    வீட்டின் வாசலில் 
    வந்து நின்றார்.

    அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே 
    எவரும் வணங்கி விழுவர். ஆசி பெறுவர்.
    அத்தகையதோர் 
    ஓங்காரத் தோற்றம்.

    அவர் தன் 
    திருச்சடைத் தலையில் ருத்ராட்ச மாலை 
    அணிந்து இருந்தார்.

    இரண்டு காதுகளிலும் பொருத்தமான குண்டலங்கள் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

    அவரது திருமார்பில் பட்டிகை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    மார்பில் 
    அணியப் பெற்றிருந்த கருநிறம் பொருந்திய மயிர்வடப் பூணூல் பார்ப்போர் கண்களைப் பரவசப்படுத்தியது.

    சூடியிருந்த
    எலும்பு மாலை 
    பய பக்தியை 
    உண்டு பண்ணியது

    நெற்றியும் திருமேனியும் திருநீறினைப் பெற்றிருந்தன.

    அவர் கால்கள்
    பஞ்ச முத்திரை 
    பதித்த திருவடிகள்.

    மொத்தத்தில் அவர் 
    மிக உயர்ந்த விரதம் பூண்ட 
    மகாவிரிதி வடிவில் இருந்தார்.

    வாசலில் வந்து நின்ற 
    மா விரத  முனிவரைக்
    (மகா விரிதி) கண்ட மாத்திரத்தில் மானக்கஞ்சாறனார் சிவநாமம் உச்சரித்தபடி அருகில் சென்று 
    அடி வணங்கி 
    வீட்டிற்குள் அழைத்தார்.

    அவரைச் 
    சிவனாகவே பார்த்த 
    மானக்கஞ்சாறனார் மலர்ந்த முகத்தோடு வீட்டில் அமர வைத்து அறுசுவை அமுதுக்கு மனைவியிடம் 
    அன்போடு ஆணையிட்டார்.

    "ஆமாம்…
    இங்கு என்னப்பா விசேஷம்?
    தெருவெங்கும் 
    பூரண கும்பங்களும் தோரணங்களும் அலங்காரம் கொண்டு
    விழாக்கோலம் பூண்டிருக்கிறதே ?

    உன் வீடு 
    மங்கள இசையோடு மனமயக்கம் செய்கிறதே !

    "ஏதேனும் விழாவா….? "
    விசாரித்தார்

    "ஐயன்மீர்….!
    தாங்கள் ஊருக்கு 
    வந்ததே விசேஷம்.

    என் வீட்டில் எழுந்தருளியிருப்பது 
    என் பிறவிப் பயன்.
    மூத்தோர் செய்த புண்ணியப் பலன்.

    என் அன்புக்குரிய மகளுக்குத் திருமணம்.

    அதற்காகவே 
    இத்தனை அமர்க்களம் !"
    என்று விவரித்து விட்டு

    "என் மகளை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும். அவள் 
    புகுந்த வீட்டில்
    திருமகளாய் திகழவேண்டும்." என்றவாரே வீட்டிற்குள் இருந்த மகளை 
    'அம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தார் மானக்கஞ்சாறனார்.

    இயற்கையாகவே 
    அழகிய தமிழ் மகள். மணப்பெண் என்றால் கேட்கவா வேண்டும்!

    கனக்கச்சித
    அலங்காரத்துடன் 
    பிறை நெற்றியில் 
    சிறை படாமலிருந்த முடிக்கற்றையை ஒதுக்கியபடி வந்தாள் அந்த யவனராணி.

    மாவிரத முனிவர் மணப்பெண்ணை அன்பொழுகப் பார்த்து ஆசிர்வதித்தார்.

    அவள் 
    திருப்பாதம் தொழுது எழுந்த போது 
    நீண்ட முடியழகை 
    வியந்து நோக்கி மானக்கஞ்சாறனாரிடம்,

    "குழந்தையின் முடியழகு திருமுடி 
    கொண்டோனுக்குப் பிடித்தமானது.

    இவள் தலைமயிர் கொண்டு பஞ்சவடி (பூணூல்) அமைத்தால் பரமனே மகிழ்வார்.

    எனக்கு 
    அப்படி அணிய ஆசை" என்றார் ஆசை ஆசையாக
    மாவிரத முனிவர்.

    ஒரு கணம் கூட யோசிக்காத மானக்கஞ்சாறனார்
    "என்ன தவம் செய்ததோ என் குலம் !
    என் மகள் செய்த புண்ணியம் தான்…." என்றவாறு 
    தன் உடைவாளை எடுத்து தனது அன்பு மகளின் அழகிய சுருள் கூந்தலை அடிவரை அறுத்து 
    மகா தவசிக்குத் தரத் திரும்பினார்.

    ஆனால் தவசி காணவில்லை.
    எவர் கண்ணிலும் அகப்படவில்லை. மாயமாய் மறந்து போயிருந்தார்.

    மா விரிதியாய் வந்து மாயமாய் மறைந்தவர்
    மாணிக்க வண்ணன் அன்றி வேறு யார் 
    இருக்க முடியும் ?

    தீராத விளையாட்டுப் பிள்ளையான 
    தில்லையம்பதியைத் தவிர வேறு யார் 
    இருக்க முடியும் !

    அக்கணத்திலேயே பேரொளியோடு 
    பார்வதி தேவியோடு காட்சி தந்தார் சிவபிரான்.

    "மானக்கஞ்சாறனாரே…!

    உன் 
    அகத்தில் அன்பு வடிவத்தில் அடக்கம் வாய்மொழியில் பண்பு கண்டு வியந்து போனேன்.

    உனது அன்பின் திறமும் அறத்தின் உரமும் கண்டு உளம் மகிழ்ந்தேன்.

    இனி எல்லாம் 
    இனிதே நடக்கும்.

    உரிய காலத்தில் 
    நீ சிவபுரி வருவாயாக!"

    என மானக்கஞ்சாறனாரை மட்டுமில்லாது 
    அவரது வீட்டில் கூடி இருந்தவர்களையும் மாலை சூடக் காத்திருந்த மணமகளையும் வாழ்த்தி மறைந்தார் இறையனார்.

    இரு கரங்களை 
    உச்சியில் குவித்த வண்ணம் 
    போற்றி போற்றி என போற்றி வணங்கினர் அத்தனை பேரும்.

    மானக்கஞ்சாறனார் இறையருளால் இப்படித்தான் மானக்கஞ்சாற நாயனார் ஆனார்.

    இறைவனின் அருட்கொடை
    இத்தோடு முடியவில்லை.

    மணப்பெண்ணின் அழகிய கூந்தல் அக்கணமே 
    பேரழகுக் கூந்தலாக மாற பேரழகுப் பெட்டகமாக அவள் ஜொலித்தாள்.
    சிவநாமம் ஜெபித்தாள்.

    ஏதுமறியா 
    மாப்பிள்ளை கலிக்காமனார் 
    வெள்ளைப் புரவி 
    ஏறியமர்ந்து உற்றார் உறவினர் புடைசூழ மணமகள் வீடு வந்தார்.

    நடந்ததைக் கேட்டறிந்து வியப்பு மேலிட்டார்.

    பரம்பொருளின் கருணையை 
    நினைந்து நினைந்து வானை நோக்கி 'கருணைக்கடலே….'  என்று கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தார்.

    பிறகென்ன…..
    பரமபிதாவின் ஆசிபெற்ற மானக்கஞ்சாற நாயனாரின் 
    மகளின் திருமணம் இனிது நடந்தது.

    பெரியோர்களிடம் ஆசி பெற்ற மணமக்கள் 
    ஊர் மக்கள் வாழ்த்த கலிக்காமனார்
    ஊருக்குச் சென்று 
    இனிய இல்வாழ்க்கையைத் தொடங்கினர்.

    இறையருள் பெற்ற மணமகள்
    பிறந்த வீடும் புகுந்த வீடும் பெருமை கொள்ளும் நல்வாழ்வைப் பெற்று 
    வாழ்ந்து வரலானாள்.

    பின்னாளில் கலிக்காமனாரும் 
    ஒரு நாயன்மார் ஆக சிவனருள் பெற்றார் என்பது சிவாம்ச செய்தி.

    'ஒரு மகள் கூந்தல் தன்னை 
    வதுவை நாள் ஒருவருக்கீந்த பெருமையார் தம்மைப் போற்றும் பெருமையென் னளவிற்றாமே'
    எனப் போற்றுகிறார் பெரியபுராணம் அருளிய சேக்கிழார் பெருமான்.

    'மலைமலிந்த தோள் வள்ளல் 
    மானற்கஞ்சாறன் அடியார்க்கு அடியேன்'
    என வணங்குகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

    திருச்சிற்றம்பலம்.

  • Thulasi Story

    உலகை காக்கும் திருமாலுக்கு உகந்தது துளசி. எப்போதும் திருமாலின் திருமார்பில், மாலையாக திகழ்வதை  விரும்புபவள் துளசி தேவி. ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்று பொருளாகும். துளசிக்கு பிருந்தை என்றொரு  இன்னொரு பெயரும் உண்டு. ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன்’ என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளதில் இருந்து துளசியின் மகத்துவத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.  

    இத்தனை பெருமையும் ,மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்ததற்கு ஒரு புராண  கதை உள்ளது.

    துளசித்தாய் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவனிடம்  ,ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.

    உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ,அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல் கக்கும் தீப்பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.

    இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.

     பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.

     பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை, மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.

    இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.
     

  • Naga Chadurthi Story

    இது பற்றி பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன. காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் நாகங்கள் பிறந்தன. அவை வளர்ந்த பிறகு தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கின. அதனால், கோபம் கோண்ட தாயார் கத்ரு, “தாய் சொல்லைக் கேட்காததால்  தீயில் விழுந்து இறப்பீர்களாக” என்று சாபம் கொடுத்துவிடுவாள். ஜனமேஜயன் மூலம் அந்தச் சாபம் பிற்காலத்தில் நிறைவேறும். 

    நாகங்களின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ எனும் கொடிய நாகம் தீண்டி பரீட்சித் எனும் அரசன் இறந்துவிடுவான். தந்தையை இழந்து வாடிய பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் தந்தையின் இறப்புக்குக் காரணமாக விளங்கிய பாம்பு இனத்தையே அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ’சர்ப்பயக்ஞம்’ எனும் வேள்வி செய்வான்.

    அந்த வேள்வியில் பாம்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்து இறக்கும். பாம்புகள் அனைத்தும் அழிவதைக் கண்ட அஸ்தீகர் எனும் முனிவர் ஜனமேஜயனது வேள்வியைத் தடுத்து நிறுத்தி நாகர்களுக்குச் சாப விமோசனம் அளித்து, பாம்பினத்தைக் காப்பார். ஆஸ்திக முனிவர் நாகங்களுக்குச் சாப விமோசனம் அளித்ததும் இந்த ‘நாக சதுர்த்தி’ தினத்தில்தான். இந்த நாளில் அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படும்  வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்சயன் ஆகிய நாகங்களை வணங்க வேண்டும். 

    பகவான் அனந்தன் என்னும் நாக வடிவில் உலகத்தைக் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அனந்தனுக்குத் துணையாக பாதாள லோகத்தில் தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் வசிக்கின்றன. அவர்களை வணங்கும் விதத்தில் பாம்புப் புற்றில் துள்ளு மாவு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். 
     

  • Athipath Nayanar Story

    63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் நாகப்பட்டினத்தை  அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்த மீனவர்  ஆவார். அக்காலத்தில் நுளைப் பாடி என்றழைக்கப்பட்ட நம்பியார் நகரில் பெரிய செல்வந்தரான இவர் படகில் சென்று மீன் பிடித்து வரும் போது விலைமதிப்புள்ள மீனை இறைவன் சிவபெருமான் படைத்து வந்தார் .

    அந்த மீனை திரும்பவும் இறைவனை வேண்டி கடலிலேயே விட்டு விடுவது அவரது வழக்கம். இதனால் நாளடைவில் அவர் செல்வத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.  அப்போதும் தனது நிலையிலிருந்து அவர் மாறவில்லை. அவரது பக்தியை சோதனை செய்ய நினைத்த இறைவன் சிவபெருமான் அவரது வலையில் வெள்ளி மீன் ஒன்றை கிடைக்கச் செய்தார் . 

    மிகுந்த வறுமையில் இருந்தாலும் அந்த மீனையும் இறைவன்  சிவபெருமானை வேண்டி அம்மீனை  கடலில் விட்டு விட்டார். மறுநாள் அவருக்கு மீன்கள் ஏதும் அகப்படாத நிலையில் அவரது வலையில் வைரமும் ,வைடூரியமும், மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஒரே ஒரு மீன் மட்டும் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது .

    ஆனால் தன்னுடைய வறுமையான நிலையிலும் தனக்குக் கிடைத்த ஒரே ஒரு விலைமதிப்பற்ற மீனையும் இறைவனை வேண்டி கடலில் விட்டார்.  அப்போது இறைவன் சிவபெருமான் பார்வதியுடன் தோன்றி காட்சி அளித்தது அதிபத்த நாயனாருக்கு முத்திப்பேறு அளித்ததாக வரலாறு.
     
    இதனை நினைவு கூறும் விதமாக ஆயில்ய நட்சத்திர தினத்தன்று  நாகப்பட்டினத்தில் தங்க மீன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் . நடுக்கடலில் நடத்தப்படும் இத்திருவிழாவில் பங்கேற்க  தமிழகம் முழுவதிலும் இருந்து மீனவர்களும் , சிவனடியார்களும்,  பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் நாகப்பட்டினம் கடற்கரையில் கூடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொற்று காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி  நீலாயதாட்சி அம்மன் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.
     

  • Varalakshmi viradham thondriya kadhai

    செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம்.

    பெயர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தரும் விரதம் இல்லை இது. நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு என்று எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது.
     
    இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி முதன் முதலாக சொன்னவர் மகாலட்சுமியேதான்! ஆமாம், சாருமதி என்ற பெண்ணின் கனவில் வந்து இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று சொன்னாள். அந்த சாருமதி, வடஇந்தியாவில், மகத நாட்டில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பெண். தன் மாமனார், மாமியாருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து, கணவனை தெய்வமாக மதித்து, கற்புநெறி தவறாமல், பயபக்தியோடு வாழ்க்கை நடத்தியவள்.

    அவளுடைய இந்தப் பண்புகளைப் பார்த்து சந்தோஷப்பட்ட மகாலட்சுமி, அவள் மேலும் எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றியும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றியும் விவரமாகச் சொன்னாள், மஹாலட்சுமி.

    இதில் ஒரு விஷயத்தை கவனித்தல் வேண்டும். அதாவது, மகாலட்சுமி சாருமதியின் குணத்தைப் பாராட்டி உடனே செல்வத்தை வாரி வழங்கிவிடவில்லை. விரதம் இருக்கச் சொல்லி, அதன் பலனாகத்தான் அவள் எந்த வளத்தையும் அனுபவிக்கவேண்டும் என்றும் உணர்த்தியிருக்கிறாள். ’இந்த விரதத்தைப் பெண்கள்தான் அனுசரிக்கவேண்டும் என்பதில்லை, ஆண்களும் மேற்கொள்ளலாம்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் விக்கிரமாதித்த மகாராஜா போன்றவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆடி மாதம் பவுர்ணமிக்கு முந்தின வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். சில வருடங்களில் ஆவணி மாதத்திலும் இந்த விரதநாள் வரும். அதேபோல இந்த ஆண்டும் ஆவனி 8 ஆம் தேதி வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

  • Garudazhvar story

    தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. காஷ்யப முனிவருக்கு காத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். காத்ருவும் ,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. 

    வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள். யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை. மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

    அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின. வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். 

    இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

    பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார். விஷ்ணுவை தன் மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை.

    கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான்.

    ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது.

    பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். 
     

  • Story about lord krishna

    கோலாகல_கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் யோகி ஓம் பரமானந் சுவாமிகளின் பகவான் கிருஷ்ணரின் ஆன்மிக உரை.

    கோலாகல பகவான் மகா விஷ்ணு பூமி  நல்லவர்களைக் காப்பதற்காகவும் நம் மனநிலை சமதளத்தில் இயங்கி குழந்தை பேறு கிடைக்கவும், தொழில் வளர்ச்சி பெறவும், திருமண தடை விலக்கி காரியம் கை கூடவும், குபேர சம்பத்து கிடைக்கவும், ஆரோக்கியம் பெறவும் பகவான் கிருஷ்ணர் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பகவத் கீதை மூலமாய் சொல்லியிருக்கிறார். ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

    பூஜை செய்யும் முறை!
    கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். 

     ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் யோகி ஓம் பரமானந்த பாபுஜி  சொல்கின்ற படி "இரகசிய மானச பூஜை " செயதால் நிச்சயம் 48 நாட்களுக்குள் ஏதேனும் ஓர் கோரிக்கை நிறைவேறும். 

    கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், அவர்படத்திற்கு முன் கேரட் கரும்பு சர்க்கரை கலந்த நிவேதனம், திராட்சை முந்திரி கலந்த பருப்புக்கள், கோதுமை பாயாசம் வைத்து ஓர் சுத்தமான மஞ்சள் துணியில் குங்குமம் சந்தனம் துளசி மூன்றையும் வைத்து முடிச்சிட்டு மணிக்கட்டில் கட்டி கொள்ள வேண்டும். துணி மிக சன்னமாக வளையல் அகலம் இருந்தால் போதுமானது. இந்த "இரகசிய பூஜை" முறை முற்றிலும் புதுமையானது. உடனடி பலன் தருவது. 

    முன்னதாக கிருஷ்ணர் அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து மேற்கண்ட முறையை செய்து வழிபட வேண்டும். பூஜை முடிவில்  உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது நன்று!  கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.

    துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.

    வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

    ஓம் நமோ நாராயணாய !