ஜூன் 10 – சூரிய கிரகணம்
பிலவ வருடம் – வைகாசி 27
அமாவாசை
சூரிய கிரகணம்
10-ஜூன்-2021 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை மா 4.51
நட்சத்திரம் : ரோகிணி ம 12.29
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Tag: Soorya graganam
-
June 10 Soorya Graganam
-
Soorya graganam enna seyakudathu
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமயல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகளை பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகணத்தால் பாதிப்பு
கிரகணம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் சாப்பிட்டு விட வேண்டும். அதற்குப் பிறகு கிரகணம் முடியும்வரை எதுவும் சாப்பிடக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த விஷயத்தில் விலக்கு அளித்திருக்கிறார்கள்.பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. கிரகண தோஷத்தால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கிரகண காலத்தில் கோவில்களில் நடை அடைக்கப்படுவதுண்டு. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது.
-
soorya graganam june 10
ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும்.
இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில், வைகாசி 27ஆம் தேதி ஜூன் 10 ஆம் தேதி வியாழக்கிழமை, இந்திய நேரப்படி காலை 8:12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1:11:19 மணிக்குள் ராகு கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. காலை 10:41:54 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்சநிலையாக இருக்கும். முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்திர கிரகணம் நிகழ்ந்தது வரும் 10ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
ராகு மறைக்கும்போது ராகு கிரஹஸ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது கிரஹஸ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. வரும் 10ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் ராகு உடன் சூரியன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது.
-
Soorya graganam mandiram
யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|
ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||
எளிய மந்திரங்கள் :
ஓம் சிவாய நமஹ
ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.
கிரகண தோஷங்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். பக்ஷி தோஷம், சர்ப்ப தோஷம் எளிதில் உட்கிரகிக்கும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது. படியில் அமரக் கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்களும் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.