Tag: Soorya bagavan

  • Soorya bagavan arpudha thagavalgal

    சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.

    சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன் , 'கிரகபதம்' என்னும்பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    சூரியன் ஒருவராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.

    சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன்.

    இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு.

    3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாக மும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.
     

  • Soorya bagavan magimaigal

    ஸ்ரீமன் நாராயணனே ராமச்சந்திர மூர்த்தியாக அவதரித்து ராவணனை அழிக்க முயன்ற சமயத்தில் அரக்கனின் பலம் அதிகரித்ததால் மனம் தளர்ந்த வேளையில் அகத்திய முனிவர் அண்ணல் ராமனிடம்  குலதெய்வமான ஆதவனை முறைப்படி வணங்கி வெற்றி பெறுவாயாக என்று கூற, அவ்வாறே வழிபட்டு ஸ்ரீராமபிரான் போரில் வெற்றி கண்டார்.

    ஆதிசங்கரர் பகவத் பாதர் ‘சூரிய பகவானை’ வழிபாட்டு கடவுளாகக் கொண்ட சௌரம் என்ற மதத்தை ஸ்தாபித்தார்.

    நக்கீரர்  திருமுருகாற்றுப்படையில் ‘உலகம் உவப்ப வலநேர்பூ திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு’. என்று சூரியபகவானை போற்றி  வணங்கி துவங்குகின்றார்.

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்  ‘ஞாயிறு போற்றுதும்’, ஞாயிறு போற்றுதும் என்று  சூரிய பகவானைபோற்றி வணங்கியே  துவங்குகின்றார்.

    அபிராமி பட்டர் உதிக்கின்ற செங்கதிர் என்றே ஆரம்பித்து  அபிராமி அந்தாதியை  பாடத் துவங்குகின்றார். மணிமேகலை என்னும் காப்பியத்தில் புத்தரை ‘புத்த ஞாயிறு’என்றே குறிப்பிட்டுள்ளார்.

    ‘யஜுர் வேதம் ‘சூரியபகவானின் பெருமைகளை போற்றியும், ‘சாம வேதம்’ அனைத்து வெற்றிகளை அளிப்பதாக போற்றியும் ‘அதர்வன வேதம்’பிணிகளை அகற்றியும் பசுவின் மடியில் உள்ள கிருமிகளை சூரியக்கதிர்கள் அழிப்பதாகவும் கூறுகிறது.