நவம்பர் 07 – சூரசம்ஹாரம்…
குரோதி வருடம் – ஐப்பசி 21
நவம்பர் 07 – 2024
வியாழன்
சூரசம்ஹாரம்,
கோயில்களில் சூரசம்ஹாரம் தரிசித்தல்
கந்தசஷ்டி விரதம் முடிவு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 9.32
நட்சத்திரம் : பூராடம் கா 9.55
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Tag: soorasamharam
-
November 07 soorasamharam
-
Thiruchendur soorasamharam
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. ஆணவம் கொண்ட சூரபதுமனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்வதே கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகும்.
அசுரர்களால் சிறைவாசம் அனுபவித்த தேவர்களை விடுவிக்கவும், கொடுமைகள் செய்த அசுரத் தலைவனான சூரபதுமனை வதம் செய்யவும் சிவபெருமானின் மைந்தனாக, முருகப்பெருமான் அவதரித்தார். தன்னை எதிர்த்த சூரனை அழித்ததோடு, அவனை ஆட்கொண்டு தன்னோடு இருக்குமாறு அருளிய கந்தனின் கருணை நிகழ்வுதான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலானது, கந்தனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், திருச்சீரலைவாய் என்ற திருநாமத்துடனும் விளங்குகிறது.
சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி எப்போது போருக்கு வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருந்தான். சுவாமி ஜெயந்திநாதர், வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.
சூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன், முதலில் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட, சிங்கமுகாசூரன் முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, சூரபதுமன் போர் புரிய வந்தான். முருக கடவுள் வேல் எடுத்து சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன்கள் சுற்றி வட்டமிட்டன.
-
Thiruchendur soorasamharam
திருச்செந்தூரில் அமைந்துள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில், இரண்டாம் படை என போற்றப்படும், மிகச் சிறப்புமிக்க கோவிலாகும். சூரசம்ஹாரம் சிவனின் தோன்றல் பாலமுருகனுக்கும், சிவனின், தீவிர பக்தன் சூரபதுமனுக்கும், திருச்செந்துார் கடற்கரையில் நிகழ்ந்ததால், அங்கு, இப்போதும் இந்நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில், ஆண்டுதோறும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகச் சரியாக, திருச்செந்துாரில் இருந்து, 6 மைல் துாரத்தில், கடற்கரையோரமாக உள்ள, மாம்பாடு என்ற தலத்தில் தான், போர் நடந்தது. தற்போது, அந்த ஸ்தலம், மணப்பாடு என, அழைக்கப்படுகிறது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… என்கிற கோஷம், விண்ணை முட்டும் அளவிற்கு, பக்தர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகனை மயில் வாகனத்தில் ஏற்றி, சேவல் கொடியை அளிக்கின்றனர். போரில் வெற்றி அடைந்ததும், முருகன், தன் அய்யன் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினான். அதற்காக, கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான், திருச்செந்துார் கோவில். இங்கு, மூலஸ்தானத்தின் பின்பகுதியில், முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை காணலாம்.
வெற்றி மாநகர் என, பொருள் படும்படி, ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம், பின், சயந்தி, செந்தில் என அழைக்கப்பட்டு, இறுதியில், திருச்செந்துார் என்ற தமிழ்ப்பெயரில் நிலைத்து இருக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நேரில் கண்டாலும், அதன் சிறப்பை படித்தாலும், பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் சொல்ல காது குளிரக் கேட்டாலும், பகைவனின் பயமின்றி தைரியமாக வாழலாம். அஞ்சும் முகம் தோன்றும் போது, இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் பிரசாதம், திருநீறு மந்திரமாகும் என்பது, திருமூலர் வாக்கு.
கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, சூரபதுமன் வதம் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உண்டு. உலக நன்மைக்காக, முருகன் அவதரித்த நாள் என்பதற்காகவும், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை வேண்டி, யாகம் செய்ய முருகன் தோன்றி, அருள்புரிந்த நாள் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டால், நல்ல பிள்ளைகள் பிறப்பர் என்பது நம்பிக்கை!
-
Thiruthani Murugan Soorasamharam
கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ… தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ… தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ… நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.
தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது.
தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்!
-
Thiruchendur soorasamharam
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை மணலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சமதளமாக்கப்பட்டு வருகிறது. கோவில் கடற்கரை, சுற்றுபிரகார வீதிகள் மற்றும் நகரின் பிரதான வீதிகளில் 70 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு மற்றும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தென்மண்டலத்தில் இருந்து 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்கு 10 இடங்களில் அகன்ற எல்.இ.டி., டிவிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.