Tag: Somavara

  • karthigai somavara viradham

    தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகும். கார்த்திகையில் சுப காரியங்கள் நடத்துவது சிறப்பு. விரதங்கள் கடை பிடிக்கவும் கார்த்திகை மாதம் உகந்ததாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாளாகும். சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்லது. கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில் தோன்றியவர் சோமன் எனக்கூடிய சந்திரன்.  சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.

    கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘

    சோம வார விரதம்:

    தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் – ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். 

    தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.

    இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.

    இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும்.

    இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. கார்த்திகை சோமவார தினத்தில் சிவனையும் விஷ்ணவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லஷ்மி கடாட்சம் உண்டாகும்.

  • Somavara pradhosham

    பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில் அயர்ச்சியில் பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். பிரதோஷ கால நடனம் பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். 

    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். 

    சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல் சூடிய சிவனுக்கு சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை உகந்த தினம்.  அதிலும், பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும். மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

    சிவ தாண்டவ தரிசனம் சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். 
     

  • Somavara vazhipadu

    வாரங்களில் திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பெருஞ் சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.

    சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணையையும் பெறுவார்கள். இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலாகத்தான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

    இந்த நல்ல நாளில் சிவபெருமான் நாமத்தை உச்சரித்து மாலை வேளையில் சிவாலயம் சென்று சிவனை தரிசித்தால். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மனதில் சந்தோஷம் நிலவும். சவாலயம் செல்ல இயலாதவர்கள். வீட்டிலேயே சிவப்பெருமான் படத்திற்கு பூஜை செய்து வணங்கினால். சிவனின் பூரண ஆசிர்வாதம் கிட்டும்.
     

  • Somavara Pradhosham

    திங்கள் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.08.2019 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சோமவார பிரதோஷம் நடைபெறுகிறது.

    பிரதோஷ காலம் :

    உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்கு தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

    சோமவார பிரதோஷம் :

    பிரதோஷ நாள் அன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பாவங்கள் அனைத்தும் விலக வேண்டி பால், சந்தனம், இளநீர், விபூதி கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடை பெற உள்ளது. அபிஷேகம் செய்து வில்வ மாலை, அருகம்புல், திராட்சை மாலை அணிவித்து வழிபாடு நடைபெற உள்ளது.

    இப்பிரதோஷ பூஜையின் மூலம் திருமண தடை நீங்கும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். .ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

    பிரதோஷ பூஜையை தொடர்ந்து சிவலிங்க ருபமாக உள்ள  468 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தனி சிறப்பாகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு பிரதோஷ நாளில் வருகை புரிந்து ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரையும், 468 சித்தர்களையும், குழந்தயானந்த ஸ்வாமிகள், ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ண பரமஹம்சர், அகத்தியர், மஹா அவதார பாபா, சீரடி சாயிபாபா, தங்க பாபா, ராகவேந்திரர், ஜகத்குரு காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள், குருதேவ், மஹாவீர், ரமணர், புத்தர், வீரபிரம்மங்காரு, சேஷாத்திரி ஸ்வாமிகள், வேதாந்த தேசிகர் போன்ற பல்வேறு மஹான்களையும் தரிசித்து பிறந்த பலனை அடையலாம்.

    பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் – பல வளமும் உண்டாகும், தேன் – இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் – விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும், நெய் – முக்தி பேறு கிட்டும். இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் – சுகவாழ்வு, சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033