Tag: Solar Eclipse

  • Solar Eclipse Important details

    வரும் 21 ஆம் தேதி காலை  9.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. மிதுன ராசியில் உள்ள மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் ஏற்படும் சூரிய கிரகணம் ஆறு மணி நேரம் நீடிக்கும்.  இந்தியாவில் மட்டுமல்லாமல் மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியும். 
    சூரிய கிரகணம் ஏற்படும் நாள் மற்றும் நேரம்

    இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும்.

    கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி.

    இந்த கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது.

    முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது.

    உச்சக்கட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு

    சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு

    கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மணிக்கு
     

  • December 26 Solar Eclipse

    டிசம்பர் 26 – சூரிய கிரகணம்
    விகாரி வருடம் – மார்கழி 10
    சூரிய கிரகணம்
    26-டிச-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    அமாவாசை    கா    11.21
    நட்சத்திரம்    :    மூலம்    மா    5.47
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Solar Eclipse Mandiram

    யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|

    ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||

    எளிய மந்திரங்கள் :

    ஓம் சிவாய நமஹ

    ஓம் கணபதியே நமஹா

    ஓம் சரவண பவ

    என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
     

    கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.

     

    கிரகண தோஷங்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். பக்‌ஷி தோஷம், சர்ப்ப தோஷம் எளிதில் உட்கிரகிக்கும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது. படியில் அமரக் கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்களும் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
     

  • solar eclipse donts

    பொதுவாக சூரிய கிரகணத்தின் போது சர்ப்ப கிரகங்களான ராகு – கேதுவின் விஷங்கள் ஒளிக்கதிர் மூலமாக வருவதாக ஐதீகம்.

    எனவே கிரகண நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. 

    அதேபோல நீராகாரங்கள், காபி, டீ போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளுதலும் தவறு.

    கிரகண நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அப்படி செய்தால் தூங்குவது தான் வாழ்க்கையில் அதிகம் நீடிக்கும்.

    அறிவியல் ரீதியாக ஒளிக்கற்றையில் கதிர் வீச்சுக்கள் இருக்கும் என்பதால் அது நல்ல பொருட்கள் மீது பட அசுத்தம் ஏற்பட்டுவிடும் என்பார்கள் அதனால் தான் கோயில்களை கூட அந்த நேரத்தில் பூட்டி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் சுத்தம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

    தர்ப்பை புல்லுக்கு எதையும் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் கிரகண நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு பொருட்களின் மீது தர்ப்பை போட்டு வைப்பது நல்லது.

    தர்ப்பை இருக்கும் காட்டிற்கு பாம்பு செல்லாது. தர்ப்பைக்கு விஷயத்தை முறியடிக்கக் கூடிய தன்மை உண்டு. இதனால் தண்ணீர் தொட்டிக்குள் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.

  • Solar eclipse of December 26

    நாளை நிகழப்போகும் சூரிய கிரகணம் மிகவும் அரிதான ஒன்று. இது போன்ற வளைவு சூரிய கிரகணம் மீண்டும் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும். 

    சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம். அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

    இந்த வளைய சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. நேரடியாக பார்த்ததால் அது கண்களின் விழித்திரையை பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். 

    தமிழ்நாட்டில் ஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.

    கிரகணம் காலை 08:08 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும். சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Solar eclipse Details

    உங்கள் ஊரில் சூரிய கிரகணம் தொடங்கி முடியும் நேரம் குறித்து விரிவான தகவல்கள்….