Tag: Sivarathiri

  • Maha sivarathiri spl

    மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல…. 

    பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார். அப்படி என்றால் மஹா சிவராத்திரியின் மகிமை என்ன என்பது புரிந்து இருக்கும். 

    இதேபோல பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான்.  ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது. 

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு. 
     

  • sivarathiri viradha murai

    சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.

    மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.

    ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.

    மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

    சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
     

  • Maha sivarathiri poojai murai

    சிவராத்திரி அன்று சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    முதல் ஜாம பூஜை – மாலை 6 முதல் 9 மணி வரை: 
    ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் , அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

    இரண்டாம் ஜாம பூஜை – இரவு 9 முதல் 12 மணி வரை : 
    பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

    மூன்றாம் ஜாம பூஜை – இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை: 
    தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

    நான்காம் ஜாம பூஜை – அதிகாலை 3 முதல் 6 மணி வரை: 
    கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.

    அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.
     

  • January 11 Sivarathiri

    ஜனவரி 11 – மாத சிவராத்திரி
    சார்வரி வருடம் – மார்கழி 27
    11-ஜன-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    திரையோதசி    ம    2.03
    நட்சத்திரம்    :    கேட்டை    கா    8.50
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • September 27 Monthly Sivarathiri

    செப்டம்பர் 27 – மாத சிவராத்திரி
    விகாரி வருடம் – புரட்டாசி 10
    27-செப்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    3.07
    நட்சத்திரம்    :    பூரம்    இ    1.02
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • June 1 Sivarathiri

    ஜூன் 1 – மாத சிவராத்திரி
    விகாரி வருடம் – வைகாசி 18
    01-ஜூன்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    மா    5.14
    நட்சத்திரம்    :    பரணி    இ    12.55
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Boomiswarar Koil Sivarathiri

    மரக்காணத்தில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற மகா சிவராத்திரி யில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கிரிஜாம்பாள் சமேத ஸ்ரீ பூமீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்தாண்டின் மகா சிவராத்திரி விழா இன்று தொடங்கியது. விழாவினை முன்னிட்டு  ஸ்ரீ பூமீஸ்வரர் க்கும், ஸ்ரீ  கிரிஜாம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    மேலும் இரவு 7 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 10 மணிக்கு  இரண்டாம் கால பூஜையும் நடைப்பெற்றன. இதில் 100 க்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சிவாய நம ஓம் , சிவாய நமஹ,  நமச்சிவா என்ற பக்தி கோஷத்துடன் சிவபெருமானை வணங்கினர்.. 

    மேலும் நள்ளிரவு 1 மணிக்கு  மூன்றாம்  கால பூஜையும் அதிகாலை  4 மணிக்கு நான்காம் கால பூஜையும்  என  4 சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. பின்னர்  சிவனுக்கு  அபிஷேகங்கள் ஆராதனை நடத்தப்பட்டு காலை 7 மணிக்கு மகா தீபாரதனையும் நடைப்பெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சிவனை வணங்கினர் இதனையடுத்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
     

  • February 3 Sivarathiri

    பிப்ரவரி 3 – மாத சிவராத்திரி
    விளம்பி வருடம் – தை 20
    03-பிப்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    12.58
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    3.56
    யோகம்    :    அமிர்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்