Tag: Simmam

  • Simmam March 2020 palangal

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    சிம்ம ராசி அன்பர்களே,
    இந்த மாதம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். புகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகி புதிய படிப்பினைகளை உருவாக்கித் தரும்.   

    குடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையிலும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி  தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.   

    உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

    தொழிலதிபர்கள் தொழிலில் ஸ்திரமான நிலையும், அபிவிருத்தி பணிகளும் நடந்து மனநிகழ்வை உண்டாக்கும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் மேலோங்கும். புதிய தொழிலுக்கு மூலதனம் வேண்டி பிரயாசை ஏற்படும். 

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆபரணம் மற்றும் ஆடம்பர பொருட்களை தங்களுக்கென வாங்குவார்கள். அலுவலகப் பணியில் தொடர்புடைய வேலைகளை வீட்டிலும் வைத்து சரி பார்ப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தகுந்த உதவிகளைச் செய்வார்கள். 

    கலைஞர்கள் சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறலாம்.

    அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள். 

    மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப் படுத்தும் போது மிக கவனம் தேவை.

    மகம்:
    இந்த மாதம் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    பூரம்:
    இந்த மாதம்  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த மாதம்   வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
    அதிர்ஷ்டகிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய்
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
    அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
     

  • Simmam Feb month predictions

    சிம்ம ராசியினரே , நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.  

    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும்.   குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது  ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.
    தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும்.  சிறு தொழிலாளர்கள் கூட நன்மை அதிகம் அடைவார்கள். தந்தையார் தொழிலில் ஈடுபட்டவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 

    அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.
    கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.
    பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
    மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

    மகம்:
    இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கப் பெறுவீர்கள். கண் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது மருத்துவரிடம் சென்று ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள்.

    பூரம்:
    இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் குடி கொண்டிருக்கும்.

    உத்திரம் 1 ம் பாதம்:
    இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். சிக்கனத்தை கடைபிடியுங்கள் எதிர்காலத்திற்கு உதவும். 

    பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை மனதார சொல்லி வாருங்கள். நிம்மதி கிட்டும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Guru Peyarchi Palangal – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    அதிகாரமும் தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே "ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். ராஜகிரகமான சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து உங்களது பாக்கிய – லாப ஸ்தானம் – ராசி – ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறியிருக்கும் குரு உங்கள் ராசியை ஒன்பாதம் பார்வையால் பார்த்து அருள் செய்கிறார். இதன் மூலம் பல விதமான நற்பலன்களை அடையப் போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், 

    பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

    விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள். 

    அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.

    கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    மகம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

    பூரம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும்.  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “செந்தாமரை மலரை” அமாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும். 
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • October month predictions – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சூரியன் தைரிய  ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

    தொழில் ஸ்தானதிபதி சுக்ரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

    குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும்.

    பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

    கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

    அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

    பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனை களும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14
    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • 2019 September month predictions – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    எந்த சூழ்நிலையிலும்  தன்னம்பிக்கையுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமையை  அதிகப்படுத்தும்.  உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணம் மேலோங்கும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். 

    தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்  பெறுவதில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி கிடைக்கும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். 

    குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும். துக்கமும், துன்பமும் நீங்கும். சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. 

    பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து  முடியும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. 

    அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். 

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.  

    மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 15, 16,    
    அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • August Month predictions – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    சிம்மராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் விரையஸ்தானத்தில் இருக்கிறார். பின்பாதியில் ராசிக்கு ஆட்சியாக வருகிறார். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  

    தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். 

    குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம்.  சுபச்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.

    பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

    கலைத்துறையினருக்கு வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். 

    அரசியல் துறையினருக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். 
    மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

    பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • April month predictions – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    கம்பீரமான தோற்றத்தை உடைய சிம்ம ராசியினரே நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். 

    தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.

    குடும்பாதிபதி புதன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

    பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. மிக நன்மையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

    மகம்:
    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும். 

    பூரம்:
    இந்த மாதம் பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும்.

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6
    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Mobile : +91 7845119542

     

  • Feb month predictions – Simmam

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

    குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

    பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும்.

    தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 

    பரிகாரம்:

    பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • 2019 Rasi Palangal – Simmam

    மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
    சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே
    கிரகநிலை:
    குருபகவான் சுக ஸ்தானத்திலும் – ராகு விரைய ஸ்தானத்திலும் – சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திலும் – கேது ரணருண ரோக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.
    குடும்பம்:
    கணவன் மனைவி இடையெ ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரம் வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாக குரு தனது பார்வையை செலத்துகிறார். இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள். வீடு மனைகள் வாங்கவும் அதனை அழகுபடுத்தவும் நல் வாய்ப்புகள் உண்டாகும்.  வாழ்க்கைத்துணையின் மூலம் நற் பலன்கள் தர உள்ளதால் அவரது பெயரில் புதிய சொத்து வாங்கும் யோகும் உள்ளது. குடும்ப ஒற்றுமை மேன்யைடையும்.  தந்தை வழி உறவினர்கள் தகுந்த உதவிகள் தருவார்கள். குல தெய்வ அருள் தகுந்த சமயத்தில் நல் வழிகாட்டும். புகைப்பிடிப்பது, மது போன்ற பழக்கங்களை விட்டு விடுவது நல்லது. 
    ஆரோக்கியம்:
    உடல் நலத்தில் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால், அதற்கு தகுந்த பயிற்சிமுறைகளும் மருத்தவ சிகிக்சை முறைகளும் பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு பெறலாம். விஷப் பிராணிகளிடம் விலகி இருத்தல் நலம். உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும். 
    பொருளாதாரம்:
    குடும்ப அங்கத்தினர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு தருவார்கள். ஒய்வுக்குகூட நேரமின்றி உழைப்பே பிரதானமாக செயல்படுவீர்கள். பணப் பிரச்சனை தீரும். 
    உத்தியோகஸ்தர்கள்:
    உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் குறையும். உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவீர்கள். மேலிட்த்தின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உண்டு. புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். 
    வியாபாரிகள்:
    வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும். தங்கும் விடுதிகள்,  சுற்றுலா பஸ்கள், சுற்றுலா கைடுகள் ஆகிய தொழில் செய்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய தேவையான நிதி உதவிகளை வங்கிகளில் தாராளமாக பெறுவார்கள். விருதுகளும். பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவார்கள். உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று தொழில் வளர்ச்சி காண்பார்கள். நவரத்தின கற்கள், தங்கம் வெள்ளி விற்பவர்களுக்கு பொன்னான காலமிது. மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை நடத்துபவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவார்கள். விவசாயப் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்களை அடைப்பீர்கள். உங்கள் நிறுவனத்திற்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
    பெண்கள்: 
    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார தடங்கல்கள் விலகும்.  செழிப்பான பணப்புழக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவர்கள் தங்கள் பணிகளில் திறமையான நிர்வாகம் செய்து உயரதிகாரிகளிடம் நற்பெயரும்,  பதவி உயர்வும் பெறுவார்கள். இனிமையாக பேசுதலும் சமூகத்தில் புகழ்பெறும் வாயப்புகளும் நிறைய உண்டு. வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 
    அரசியல்வாதிகள்: 
    சேவை செய்வதில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் சம நிலையாக இருக்கும். கோயில்களுக்கான திருப்பணிகளில் நிறைவான பொருளாதார பங்களிப்பை உறவினர் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை பெற்று தன் பங்கையும் இணைத்து திருப்பணிக்கு வழங்குவார்கள்.
    கலைஞர்கள்: 
    கலைஞர்கள் தங்கள் திறமையை  நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவார்கள். பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். தொழிலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி நற்பெயரும், பரிசும், பதக்கமும் பெறுவார்கள். 
    மாணவர்கள்: 
    முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.  சக மாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான செலவுகளுக்கு பொருளாதாரம் கிடைக்கும். நற்பெயர் பெறுவீர்கள். கல்விக்கு உதவும் வகையிலான சுற்றுலாக்களில் பங்கு பெறுவீர்கள். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியம் பெற முடியும். 

    மகம்:
    இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.  கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.
    பூரம்:
    இந்த ஆண்டு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.  வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.
    உத்திரம் – 1:
    இந்த ஆண்டு உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

    பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
    மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் சிவனுக்கு வில்வ மாலை சாற்றி தீபம் ஏற்றவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் நமசிவாய”.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு 
    அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6 

    – ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

    போன் – 7845119542