Tag: simma rasi

  • Simma rasi Monthly Prediction – September 2022

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    கிரகநிலை:
    ராசியில் சூர்யன், புதன்(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் – விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றம்:
    01-09-2022  அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
    25-09-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:
    மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித் தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய சிம்ம ராசியினரே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்கள்.  இந்த மாதம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.

    தொழில் வியாபாரத்தில்  மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும்.

    பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

    அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

    கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.

    மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

    மகம்:
    இந்த மாதம் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.   எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

    பூரம்:
    இந்த மாதம் காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் அனைத்திலும் நன்மையே நடக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு  பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த மாதம் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும்.

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: செப் 11, 12
    அதிர்ஷ்ட தினங்கள்: செப் 05, 06

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Simma Rasi September Rasi palan

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    தனது தோரணையால் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் திறன் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான். இந்த மாதம் ராசியாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. சுக்கிரனின் விரையஸ்தான சஞ்சாரம் ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    குடும்பாதிபதி புதன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

    பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.

    கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். 

    அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம்  பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். 

    மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

    மகம்:
    இந்த மாதம் உங்களின் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. நல்ல முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் மற்றும் வீண் விரையம் இனி ஏற்படாது. 

    பூரம்:
    இந்த மாதம் நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை. 

    உத்திரம்:
    இந்த மாதம் கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும். 

    பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 
    அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Simma Rasikku June month Rasi palan

    (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

    இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கும். உங்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். நீதிமனறத்தில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு.

    புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த லாபமும், விற்பனையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடப்பதால் மனதிற்கு திருப்தி ஏற்படும்.

    உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

    பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

    மாணவமணிகளுக்கு நன்மைகள் நடக்கும். சிலர் எதிர்பார்த்த விசயங்கள் கை கூடி வரும்.

    அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும். 

    கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

    மகம்: 
    இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். 

    பூரம்: 
    இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

    உத்திரம் 1 :
    இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில்  மனநிம்மதி உண்டாகலாம்

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி
    பரிகாரம்:  சித்தர்கள் சமாதி சென்று வழிபட்டு வரவும்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Simma Rasikku November Rasi Palan

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    தான் எடுத்த முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றிக் கொள்ளாத தனது திறமையால் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய சிம்ம ராசியினரே, இந்த மாதம் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருக்கிறார். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.

    தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். 

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். குடும்பத்தில் உங்களுக்கான வாக்குவன்மை அதிகரிக்கும்.
    பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.

    கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

    அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்க ளால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

    பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • simma rasi guru peyarchi

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    அதிகாரமும் தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே "ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். ராஜகிரகமான சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து உங்களது பாக்கிய – லாப ஸ்தானம் – ராசி – ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறியிருக்கும் குரு உங்கள் ராசியை ஒன்பாதம் பார்வையால் பார்த்து அருள் செய்கிறார். இதன் மூலம் பல விதமான நற்பலன்களை அடையப் போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், 

    பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

    விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள். 

    அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.

    கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    மகம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

    பூரம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும்.  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “செந்தாமரை மலரை” அமாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும். 
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5