Tag: Saturday

  • Is the broom Mahalakshmi…?

    வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படும் துடைப்பத்துக்கு முக்கிய இடமுண்டு. இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால், துடைப்பத்தை மரியாதையுடன் கையாள்வது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பை வீட்டில் நிலைநிறுத்தும். துடைப்பம் வாங்கும் நாள், பயன்பாடு, பராமரிப்பு முதல் பழையவற்றை அகற்றுவது வரை குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது மகாலட்சுமியின் அருளைப் பெற உதவி புரியும்.

    துடைப்பம் வாங்கும் நாள்: செவ்வாய் அல்லது சனிக்கிழமைகள், குறிப்பாக தேய்பிறை நாட்களில், துடைப்பம் வாங்குவது மங்களகரமாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி முடிந்த பிறகு இந்நாட்களில் வாங்கினால், மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும். இது வீட்டில் பொருளாதார மேம்பாடு, செல்வ வளர்ச்சியை உறுதி செய்யும். புதிய துடைப்பத்தை கனவில் கண்டால், அது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும், வீட்டில் மகிழ்ச்சி, நிம்மதி நிலவுவதற்கான அடையாளமாகவும் வாஸ்து கூறுகிறது.

    பயன்பாட்டு விதிகள்: துடைப்பம் மகாலட்சுமியை மகிழ்விக்கும் பொருளாக இருப்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை பெருக்கும்போது முடிகள், தூசி சிக்கியிருந்தால், அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டு, துடைப்பத்தை சுத்தப்படுத்த வேண்டும். துடைப்பத்தை கால் படாத இடத்தில், மறைவாக வைக்க வேண்டும். பிறர் அதைப் பார்ப்பது செல்வத்துக்கு நல்லதல்ல. துடைப்பத்தை காலால் மிதிப்பது, ஒருவரை அதைக் கொண்டு அடிப்பது மகாலட்சுமியின் கோபத்தை வரவழைக்கும்.

    வீட்டை சுத்தப்படுத்திய பிறகு, துடைப்பத்தை தலைகீழாக வைப்பது தவறு. இது வீட்டில் சண்டை, பதற்றத்தை அதிகரிக்கும். எப்போதும் நேராக, சரியான இடத்தில் வைப்பது நேர்மறை சக்தியைப் பரப்பும். இரவில், குறிப்பாக சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, விளக்கேற்றிய பின் வீடு பெருக்குவது மகாலட்சுமியின் அருளைக் குறைக்கும். மேலும், ஒருவர் வீட்டை விட்டு வெளியே சென்ற உடனே பெருக்குவதைத் தவிர்க்கவும்; ஒரு மணி நேரம் கழித்து பெருக்குவது நல்லது.

    பழைய துடைப்பத்தின் பயன்பாடு: பழைய துடைப்பத்தை வீட்டில் விட்டுவிட்டு புதிய வீட்டுக்கு செல்வது தவறு. இது மகாலட்சுமியை பழைய வீட்டிலேயே விட்டுவிடுவதாக அர்த்தம். பயன்படுத்திய துடைப்பத்தை தானமாகவோ, பிறர் பயன்படுத்தவோ கொடுக்கக் கூடாது. இயற்கையான துடைப்பங்கள் (எ.கா., தென்னங்குச்சி, பூந்துடைப்பம்) பயன்படுத்துவது சிறந்தது. இவற்றை வெட்ட வெளியில் எரித்து சாம்பலாக்கலாம். செவ்வாய், வெள்ளி நாட்களில் குப்பையில் போடுவதைத் தவிர்க்கவும். பறவைகள் துடைப்பக் குச்சிகளை கூடு கட்ட எடுத்தால், அது குடும்பத்துக்கு நற்பலனைத் தரும் என சாஸ்திரம் கூறுகிறது.

    மகாலட்சுமியின் மரியாதை: துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் முறம் சுத்தத்தின் அடையாளங்கள். இவற்றை மரியாதையுடன் கையாள்வது மகாலட்சுமியை மகிழ்விக்கும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது செல்வ தேவியின் அருளை நிலைநிறுத்தும். துடைப்பத்தை வாங்குவது, பயன்படுத்துவது, அகற்றுவது ஆகியவற்றில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டில் நேர்மறை சக்தி, பொருளாதார வளர்ச்சி, மன நிம்மதியை உறுதி செய்யும்.

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • November 04 2023 Saturday

    நவம்பர் 4 – சனிக்கிழமை
    சோபகிருது வருடம் – ஐப்பசி 18
    04-நவ-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி ந.இ 3.13
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 10.56
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • September 23 2023 saturday

    செப்டம்பர் 23 – புரட்டாசி சனி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 6
    23-செப்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி கா 8.10
    நட்சத்திரம் : மூலம் கா 11.48
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Ishwaryam peruga Saturday Viradham

    பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமிருப்பதன் காரணம் பலபேருக்குத் தெரியாது. அதற்கான காரணத்தை தற்போது பார்ப்போம். புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார் என்பது ஐதீகம்.

    ஆகையால் சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் சனிபகவான் மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும். அப்படி செய்து வந்தால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.

  • Saturday viradham

    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

  • perumal saturday

    பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமிருப்பதன் காரணம் பலபேருக்குத் தெரியாது. அதற்கான காரணத்தை தற்போது பார்ப்போம். புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார் என்பது ஐதீகம்.

    ஆகையால் சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் சனிபகவான் மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும். அப்படி செய்து வந்தால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.

     

  • February 04 2023 Saturday

    பிப்ரவரி 4 – சனிக்கிழமை
    சுபகிருது வருடம் – தை 21
    மதுரை மீனாட்சி வண்டியூர் தெப்பம்,
    குன்றக்குடி சிவன் தேர்
    04-பிப்-2023 சனி  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00     
    திதி : சதுர்த்தசி     
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.40
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 10.40
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Puratasi Saturday Viradham

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. ஸ்ரீவேங்கடேசன் பக்தர்களின் நலனுக்காக  திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கை யுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

     புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை யன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

  • January 29 Saturday Pradhosham

    ஜனவரி 29 – சனி பிரதோஷம்
    பிலவ வருடம் – தை 16
     பிரதோஷம் 
    29-ஜன-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    மா    6.19
    நட்சத்திரம்    :    மூலம்    ந.இ    1.03
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்