Tag: Saraswathi

  • Saraswathi Devi Gayathri Mandiram

    வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை  நாள்தோறும் சொல்லலாம்.

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
    தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.
    வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே!
    கல்வித் தொடக்கத்தை செய்கிறேன்.
    அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

    இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம்.  சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக. சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான  பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.

  • Navarathiri durga lakshmi saraswathi poojai

    கலைமகளுக்த்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு.சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

    துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.

    முதல் ராத்திரியின்போது மலர்களால் துர்க்கையை அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள்.

    இரண்டாவது ராத்தியின்போது ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள்.

    மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள்.

    முதல் மூன்று நாட்களிலும் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடமிருந்து பெறும் நாம்,

    அடுத்த மூன்று நாட்களிலும், மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை

    நான்காவது நாளில் இருந்து பூஜிக்கின்றனர். அன்னைக்கு பாசம் அதிகம். அதனால் என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறுகிறாள்.

    ஐந்தாவது நாளில் பூஜிப்பதால் சகல சவுபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும்.

    ஆறாவது நாளில் அறுசுவையுடன் அல்லாது போனாலும், பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள்.

    இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்க வேண்டும்

    ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள்.

    எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள் அன்னை.

    ஒன்பதாவது நாளில் அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி

    பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

  • kalviselvam allitharum saraswathi kavasam

    சரஸ்வதி என் தலையைக் காக்க! வாக்கின்
    தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
    விரசு பகவதி கண்ணைக் காக்க! 
    நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!

    வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
    உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
    மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
    வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!

    எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க! வித்யா திருஷ்டாத்மா
    என் மார்பில் இருந்து காக்க! எழுத்து வித்யா ரூபிணி 
    என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின் 
    தேவி விழுத்தக என் அடி காக்க!

    வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான் 
    என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
    முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
    அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!

    மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க! 
    காக்க! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில் 
    தங்கியெனைப் புரந்து அருள்க! மேற்குத் திக்கில் 
    சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!

    துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில் 
    என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
    கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ 
    பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!

    அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
    புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
    எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
    எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க!
     

  • saraswathi poojai kondadapaduvadhu en

    கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

    ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது.

    வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

    இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Saraswathi poojai timings

    சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்….

    சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையின் போது பூஜை செய்வதற்கு உகந்த நேரம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

    சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:
    புரட்டாசி 28 – 14.10.2021 – வியாழக்கிழமை:

     காலை 09.00 – 10.30 மற்றும் காலை 10.30 – 12.00 மற்றும் மாலை 03.00 – 04.30

    விஜயதசமி ஏடு படிக்கும் பூஜை செய்ய உகந்த நேரம்: 
    புரட்டாசி 29 – 15.10.2021 – வெள்ளிக்கிழமை

    காலை 06.00 – 07.30 காலை 09.00 – 10.30 மாலை 01.30 – 03.00

    குழந்தைகளுக்கு அக்ஷரப்யாசம் பூஜை செய்ய உகந்த நேரம்:
    புரட்டாசி 29 – 15.10.2021 – வெள்ளிக்கிழமை:

    காலை 06.00 – 07.30 மற்றும் காலை 09.00 – 10.30 மற்றும் மாலை 01.30 – 03.00
     

    இந்த பூஜையின் போது நாம் செய்ய வேண்டியது என்ன?
    தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
     

  • Saraswathi mandiram

    வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
    வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
    கொள்ளை யின்பம் குலவு கவிதை
    கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
    உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
    கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.

    மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
    மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
    கீதம் பாடும் குயிலின் குரலைக்
    கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
    கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
    குலவு சித்திரம் கோபுரம் கோயில்
    ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
    இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
     

  • Saraswathi poojai mandiram

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    இந்நாளில் மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
    ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ.

  • Koothanoor Saraswathi koil

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

    ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

    சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

    இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

    அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

    சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

    குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

    ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

    சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை

  • Durga Lakshmi Saraswathi En?

    சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. 

    துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். துர்க்கா பூஜை ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். முதல் ராத்திரியின்போது மலர்களால் துர்க்கையை அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள். 

    இரண்டாவது ராத்தியின்போது ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள். மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள். மகாலட்சுமி பூஜை முதல் மூன்று நாட்களிலும் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடமிருந்து பெறும் நாம், அடுத்த மூன்று நாட்களிலும், மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் இருந்து பூஜிக்கின்றனர். அன்னைக்கு பாசம் அதிகம். 

    அதனால் என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறுகிறாள். பஞ்சபூதங்களுக்கும் மரியாதை ஐந்தாவது நாளில் பூஜிப்பதால் சகல சவுபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும். ஆறாவது நாளில் அறுசுவையுடன் அல்லாது போனாலும், பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள். 

    இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதிக்கு பூஜை ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள். எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள் அன்னை. ஒன்பதாவது நாளில் அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி. வெற்றி தரும் விஜயதசமி பத்தாவது நாள் விஜயதசமி. 

    விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.