Tag: sani

  • July 15 Sani Pradosham

    ஜூலை 15 – சனி  பிரதோஷம்
    சோபகிருது வருடம் – ஆனி 30   
    பிரதோஷம்
    15-ஜூலை-2023 சனி  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : திரையோதசி இ 10.1
    நட்சத்திரம் : மிருகசீரிடம் ந.இ 2.10
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Sanibagawan palangal

    4-ல் உள்ள சனிபகவான் மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.
     
    4-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.
     
    4-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.
     
    பலம் பொருந்தியவராக உள்ள சனிபகவான் 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.
     
    5-ல் சனிபகவான் மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.
     
    5-ல் உள்ள சனிபவான் ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.
     
    5-ல் உள்ள சனிபகவான் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.
     
     8-ல் உள்ள சனிபகவான் உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.
     
    6-ஆம் இடத்தில் சனிபகவானுக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனிபகவானால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.
     
    6-ல் உள்ள சனிபகவான் பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.
     
    பொதுவாக 6-ஆம் இடம் சனிபகவானுக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.
     
    6-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனிபகவான் பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.
     
    7-ல் உள்ள சனிபகவானால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.
     
    7-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.

  • Sani pradhoshathin sirappugal

    சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

    சனி பிரதோஷம் அன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

    அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

    நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

  • Sani pradhosham

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் வரக்கூடிய திரயோதசி திதிகள், சனி மஹாப்பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் 16.30 முதல் 18.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

    சனி பிரதோஷ சிறப்பு :

    சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

    இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

    அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

    நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

    பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :

    பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    தயிர் – வளம் உண்டாகும்.

    தேன் – இனிய சாரீரம் கிட்டும்.

    பழங்கள் – விளைச்சல் பெருகும்.

    பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்.

    நெய் – முக்தி பேறு கிட்டும்.

    இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.

    சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.

    எண்ணெய் – சுகவாழ்வு.

    சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்.

    மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.

  • Sani pradhosham magimaigal

    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.

    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.
     

  • Sani Ragu Kedhu dosham Hanuman Mandiram

    ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  முடிந்தவரை நேர்மையாக இருந்துவிட்டால், சனிபகவானால் உண்டாகக்கூடிய கஷ்டங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இதோடு சேர்த்து கட்டாயம் இறைவழிபாடும் நமக்கு அவசியம் தேவை.

     ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி. உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும். 
    ஹனுமனின் மூல மந்திரம் இதோ!

    " அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்  

    குமாரம் ப்ரும்ஹ சாரிணம் 

    துஷ்ட க்ரஹ வினாசயா 

    ஹனுமந்த முபாஸ் மஹே! "

    தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை உச்சரித்து, ஹனுமனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள் எந்த கிரக தோஷமும் எதுவும் செய்யாது. 

  • viradham thodanga ugandha sani pradhosham

    சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

    பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

    தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும். சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.

    கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள். பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

    இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.

    பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

    பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.

    பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.

    பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம். பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.