ஏப்ரல் 06 – சனி பிரதோஷம்
சோபகிருது வருடம் – பங்குனி 24
ஏப் 06, 2024 சனி
சனி பிரதோஷம்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 7.41
நட்சத்திரம் : சதயம் ம 1.22
யோகம் : அமிர்த-மரண
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Sani Pradhosham
-
April 06 2024 Sani pradhosham
-
April 06 2024 Sani Pradhosham
இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – ஆசை
மிதுனம் – நலம்
கடகம் – நட்பு
சிம்மம் – அமைதி
கன்னி – புகழ்
துலாம் – அன்பு
விருச்சிகம் – லாபம்
தனுசு – உயர்வு
மகரம் – ஆதரம்
கும்பம் – சுகம்
மீனம் – பிரீதி
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம் -
Thunbangalai pookum sani pradhosham
சிவனுக்குரிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியும், பிரதோஷமும். பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை சிவன் உண்டு, தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்த வேளையே பிரதோஷ வேளை.ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.
சனி பிரதோஷம் அன்று ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு இன்னும் கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று ,நாள் முழுக்க விரதம் இருந்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலத்தில் , சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.
ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.
-
Sani Pradhosham Magimaigal
ஏழரைச் சனி மற்றும் அஷ்டமத்துச் சனி நடப்பவர்களும் இது வரை வாழ்க்கையில் நல்லதே நடக்கவில்லை என்று புலம்புவர்களும் சனி பிரதோஷம் அன்று சிவ சந்நிதியில் நில்லுங்கள். எல்லா சத்விஷயங்களும் கிடைக்கப்பெறுவீர்கள் என்பது உறுதி.
மற்ற கிழமைகளில் பிரதோஷம் வந்தால், பிரதோஷம் என்று மட்டும் சொல்லுவார்கள். ஆனால் சனி பிரதோஷத்தை சாதாரணமாகச் சொல்லமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.
சனிக்கிழமை வரும் பிரதோஷம். நம் ஜாதகத்தில், எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம் என்கின்றன ஆகமங்களும் சாஸ்திரங்களும்!
ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். பொதுவாகவே, ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம்.
கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். முடிந்தால் கையளவு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் வழங்குங்கள். சிவனாருக்கு வில்வத்துடன் செவ்வரளியும் வழங்கி தரிசியுங்கள்.
இன்னும் முடியுமெனில், நந்திதேவருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். குளிரக் குளிரச் செய்கிற அபிஷேகத்தால், உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குளிரப்பண்ணுவார் சிவனார்!