Tag: Sangu

  • Sangu Magimai Thirupavayil

    ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. 

    ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.

    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
     

  • Panjanyam sangu

    பாஞ்சஜன்யம் – சங்கு 

    விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
    யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
    தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
    சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!  

    மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

    கௌமோதகம் – கதை 

    ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
    கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
    கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

    பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

    நந்தகம் – வாள் 
    ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
    சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
    தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
    கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

    கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

    சார்ங்கம் – வில்  
    யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
    சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
    பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
    ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

    தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.
     

  • Valampuri sangu magathuvam

    பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம்.

    பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக அவர்கள் நம்பினார்கள்.

    கோவில் மணி

    பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம். சங்கு ஊதுவது என்பது தற்போதைய சூழலில், அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாகவும், ‘அர்த்தம்’ எனப்படும் பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப் படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது.

    மேலும், மங்களகரமான பூஜை வேளைகளில் தேவையற்ற பேச்சுகள் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து விடாதிருக்க சங்கநாதம் உதவி செய்கிறது. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கு ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. மகாகவி பாரதியும் ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..’ என்று வெற்றியை பறை சாற்றும் பொருளான சங்கு பற்றி பாடுகிறார்.

  • Valampuri Sangu Magimaigal

    108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு புனித தீர்த்தத்தை அதில் நிரப்பி இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகம் சங்காபிஷேகம் எனப்படும். கார்த்திகை மாதம் சோம வாரத்தன்று சிவபெருமானுக்குச் செய்வது மிகவும் சிறப்பானது. சங்காபிஷேகம் கண் குளிரக் கண்டு இறைவனைத் தரிசித்து வழிபடுவதால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். இப்படிப் பெருமைகள் பெற்ற வலம்புரிச் சங்கில் காசுகளை வைத்து முக்கிய தினங்களில் வழிபட்டு வந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.

    ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தல் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

    கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

    வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நனம் செய்தால், நமக்கு 

    பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ ! "அங்க லஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்" என்று விளங்குகிறது. 

    சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

    நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப்பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

    வாஸ்து தோஷம் உள்ள  வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலப்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

    அதிகக் கடன் வாங்கியவர்கள் பெளர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16- வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

    சுத்தமான் உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது ஓடிவிடும்.

    ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்தால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

    பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உதராட்சம் இட்டு அது ஊரிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோசஹ்ங்கள் அனைத்தும் விலகும்.