ஆகஸ்ட் 22 – மகா சங்கடஹர சதுர்த்தி….
குரோதி வருடம் – ஆவணி 06
ஆகஸ்ட் 22 – 2024
வியாழன்
சுபமுகூர்த்த நாள்
சங்கடஹர சதுர்த்தி
வாஸ்து நாள் (காலை 7.23 – 7.59)
சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் :கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 6.14
நட்சத்திரம் : பூரட்டாதி அ.கா 4.32
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Tag: Sangadahara
-
August 22 2024 Sangadahara chadurthi
-
Karur Sangadahara chadurthi
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு புரட்டாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
-
Sangadangal theerkum sangadahara chadurthi
சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உங்களின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார் விநாயக பெருமான்.
எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் விநாயகர் பூஜை செய்து தொடங்குவதால், நினைத்த காரியம், செயல் என்று எதுவாயினும் எளிதில் முடியும். இப்படி இருக்க மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் செயலை தொடங்குவது இன்றும் சிறந்தது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். 'மகாசங்கடஹர சதுர்த்தி' அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
-
vinayakar arul tharum sangadahara chadurthi
முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.
சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.
இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.
இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.
-
September 13 2022 sangadahara chadurthi
செப்டம்பர் 13 – சங்கடஹர சதுர்த்தி
சுபகிருது வருடம் – ஆவணி 28
சங்கடஹர சதுர்த்தி
13-செப்-2022 செவ்வாய்
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை ம 1.40
நட்சத்திரம் : ரேவதி கா 10.08
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
July 16 2022 sangadahara chadurthi
ஜூலை 16 – சங்கடஹர சதுர்த்தி
சுபகிருது வருடம் – ஆனி 32
சங்கடஹர சதுர்த்தி
16-ஜூலை-2022 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 6.10
நட்சத்திரம் : அவிட்டம் இ 8.08
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
December 22 sangadahara chadurthi
டிசம்பர் 22 – சங்கடஹர சதுர்த்தி
பிலவ வருடம் – மார்கழி 7
22-டிச-2021 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை ம 3.31
நட்சத்திரம் : பூசம் இ 11.44
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Sangadahara chadurthi history
முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைத்தார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
ஸ்ரீகிருஷ்ணர் நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற்பட்டது. எனவே அவர் இந்த விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீளப் பெற்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.
தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைபிடித்து நவகிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.
மேலும், இந்திரன், இராவணன் போன்றோர் இந்த விரதத்தின் மூலம் பலன் அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
-
Sangadahara chadurthi
முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.
சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.

இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.
இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.
-
Sangadahara chadurthi viradham
விநாயகப் பெருமானை வழிபட பல விரதங்கள் இருந்தாலும் மாதம் ஒரு முறை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியதாகும். இந்த விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.
சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.
விரதம் இருக்கும் முறை
சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டும் உபவாசம் இருக்கலாம்.
ஆலயத்தை 11 முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனைத் தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழு விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலைச் சொல்லி வழிபடலாம்.