Tag: Saneeswaran

  • Thirunallaru Sri Darbaranyeswarar Devasthanam Brahmotsava Festival Bhutha Vahana Veethiula

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா பூத வாகன வீதியுலா

     

  • Thirukollikodu pongu saneeswaran

    சனீஸ்வரருக்கென இருக்கும் தனி ஆலயங்கள், முக்கியமான ஆலயங்கள் என்று சில மட்டுமே உள்ளன. திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயத்தில் அப்படியொரு சக்தியை நமக்கெல்லாம் வழங்கி அருள்வதற்காக சந்நிதி கொண்டிருக்கிறார் சனீஸ்வரர்.

    திருவாரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் அக்னீஸ்வரர்.  திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம்  சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான ஆலயம்.

    இங்கே உள்ள சனி பகவான், பொங்கு சனீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.சனி பகவான், நீதிபதி. நீதிக்கு மட்டுமே தலைவணங்கி அருளக்கூடியவர். நீதியை மட்டுமே கொண்டு பக்தர்களுக்கு அருளக்கூடியவர்.

    "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிடமாட்டான்’ எனும் வசனம், சனீஸ்வர பகவானுக்கு மிகவும் பொருந்தும். சோதனைகள் கொடுத்தாலும் சனி கிரகம் எப்போதுமே கைதூக்கி விடும், நன்மைகள் செய்யும். வாழ்வை உயர்த்தி வளம் தரும். ஏனென்றால், சனீஸ்வரர், நீதிபதியைப் போல் செயல்படக் கூடியவர்.

    நவக்கிரகங்களில் மிக மிக முக்கியமானவராக வணங்கப்படுபவர் சனீஸ்வர பகவான். வேறு எந்தத் தெய்வத்துக்கும் ஈஸ்வரப் பட்டம் இல்லை. ஆனால் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டமும் இணைந்து அழைக்கப்படுகிறது.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி எனும் காலங்கள் உண்டு. இதைக் கொண்டு, சனீஸ்வரரை தக்கபடி வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எல்லா நலத்தையும் வளத்தையும் கொடுப்பார். அதற்காகவே, பொங்கு சனீஸ்வரராக இருந்து அருள்பாலிக்கிறார். அதுமட்டுமின்றி, ஆயுள்காரனும் சனி பகவானே! எனவே, ஆயுள் பலமும் ஆரோக்கிய பலமும் தந்து அருள் வழங்குகிறார். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுகிறார்.

    சனிக்கிழமைகளில், பொங்கு சனீஸ்வரரை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். எள் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள். தினமும் சனி பகவானை நினைத்து காகத்துக்கு உணவிடுங்கள். தோஷமெல் லாம் நிவர்த்தியாகும். குறிப்பாக, சனியால் உண்டான தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். சனி பலம் பெற்று, உத்தியோக, தொழில், வியாபார விஷயங்க ளில் உன்னத நிலையை அடைவீர்கள்.

  • Saneeswaran koil bramorchava kodi

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்து கோயில் உள்ளது . நவகிரகங்களில் பரிகார ஸ்தலமான இக்கோவிலில்  ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை ஒட்டி நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.   

    முன்னதாக பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ,மங்கள இசையுடன்  காலை 6.45 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது . இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தேரோட்டமும் , 13ஆம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .   

    தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான்  திருவீதி உலாவை ஆண்டுக்கு ஒரு முறை  பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காண முடியும் . இதை தொடர்ந்து தெப் போற்சவம் , சண்டிகேசுவரர் உற்சவம் நடைபெற்று ஜீன் மாதம் 16ம் தேதி  விசாக தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது