Tag: Samayapuram

  • Samayapuram Rishaba vaganathil Amman Veedhi Ula

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழா கடந்த 6 ந்தேதி தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    ஆயிரம் கண்களுடைய சமயபுரத்தாளுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும்.பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில்,ஐம்பெருங்கலை,ஐம்பெரும்பீடம், மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள பஞ்சபிரகார உற்சவம் மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்க்காக இவ்விழா நடைபெறும்.

    இந்நிலையில் 9 ம் நாளில் அம்மன் ரிஷப வாகனத்தில் வசந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு சன்னதி மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள்  பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
     

  • Samayapuram Mari amman Koil thiruvizha

    நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்ககு அருள்பாலித்தார்.       திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 16 ந்தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக அம்மன் காமதேனு வாகனம், முத்து பல்லக்கு,தெப்பத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்நிலையில் சித்திரை தேரோட்டத்தின் நிறைவு  நாளான  இன்று மாலை அம்மனுக்கு அபிஷேகம் கண்டருளி இரவு  தங்க கமல வாகனத்தில் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மூலஸ்தானம் சென்றடைந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    இவ்விழாவினை  கோயிலின் இனை ஆணையர் அசோக்குமார், அலுவலக பணியாளர்கள்,கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
     

  • Samayapuram Mariamman Koil Thaipoosa thiruvizha

    சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    12-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.

     21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    காலை 6 மணிக்கு வட காவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.