Tag: Sakthi

  • Rishabam Sakthi Online – April Monthly Prediction – 2024

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

    கிரகநிலை:

    பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சனி – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-04-2024 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-04-2024 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-04-2024 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-04-2024 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அனுபவ ஞானத்தைக் கொண்டும் சமயோசித சாமர்த்தியத்துடன் செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் ரிஷப ராசியினரே இந்த மாதம் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.

    குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

    பெண்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

    கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.

    ரோகிணி:

    இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.   எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.

    மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

    இந்த மாதம்  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால்  காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம்.

    பரிகாரம்:  வியாழக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் தாயாரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
    சந்திராஷ்டம தினங்கள்: 28, 29, 1, 2
    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

     

  • Thulam March Monthly Prediction – Sakthi Online – 2024

    துலாம்:

    கிரகநிலை:

    ராசியில்  சந்திரன் –  சுக  ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சனி –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ  – களத்திர  ஸ்தானத்தில் குரு  –  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    14-03-2024 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2024 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-03-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    02-03-2024 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற துலா ராசி அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த மாதம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

    தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

    குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும்.

    பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது.

    அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

    கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

    மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

    சித்திரை 3, 4 பாதம்:

    இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

    சுவாதி:

    இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

    அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Meenam Sakthi Online August Monthly Prediction – 2023

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    16-08-2023 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-08-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    19-08-2023 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    24-08-2023 அன்று சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் மீன ராசியினரே இந்த மாதம்  எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.

    தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.

    குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது.

    பெண்களுக்கு நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.

    மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவன மாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

    கலைத்துறையினர் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வாய்ப்புகள் நிறைய வரும்.

    அரசியல் துறையினர் புதுத் தெம்புடன் இருப்பார்கள். சிலர் உங்கள் மீது பொறாமையில் இருப்பார்கள். உங்கள் முடிவுகளை தெளிவாக எடுங்கள்.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில்  நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில்கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும்.  

    ரேவதி:

    இந்த மாதம் திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணபுழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதூக்கலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

    பரிகாரம்: சாய்பாபாவை பஜனை பாடல்கள் பாடி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Dhanusu Rasi Sakthi Online August Monthly Prediction – 2023

    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – பஞ்சம ஸ்தானத்தில் குரு, ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன் – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    16-08-2023 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-08-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    24-08-2023 அன்று சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய தனுசு ராசியினரே இந்த மாதம்  எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு உண்டாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படு வீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

    தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும்.

    கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

    பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

    மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

    கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

    அரசியல்துறையிலிருந்து முன்னேறுவதற்கான பாதையை நாம் கண்டறிந்து செல்வதற்கு புதிய விதமான வழிகளை அமைத்துக்கொண்டு அவ்வழிகளை பயனப்பாதையாக்கிச் செல்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் சேவையைப் புரிந்துக் கொள்வார்கள்.

    மூலம்:

    இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார்.

    பூராடம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை  அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களால் ஏற்படும்  தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்ப்புகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

    பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Kanni Rasi Sakthi Online August Monthly Prediction – 2023

    கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    கிரகநிலை:
    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) – அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகு – லாப ஸ்தானத்தில் சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன் என கிரகநிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    16-08-2023 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-08-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    19-08-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    24-08-2023 அன்று சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் கன்னிராசியினரே இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலத்தை தருவார். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

    தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும்.

    குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக் காக செலவு செய்ய நேரிடும்.

    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர் களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

    கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.

    அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

    உத்திரம் 2, 3, 4 பாதம்:
    இந்த மாதம் கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    அஸ்தம்:
    இந்த மாதம் எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரத்து அதிகப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும்.

    சித்திரை 1, 2, பாதம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

    பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8, 9

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29, 30

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Shimmam July Monthly Prediction Sakthi Online – 2023

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தைரிய ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு  – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்  – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்   என கிரக நிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    02-07-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  

    03-07-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    04-07-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-07-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    23-07-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து  ராசிக்கு  மாறுகிறார்.

    பலன்:

    கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசியினரே இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும்.

    அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம் அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

    மகம்:

    இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும்.

    பூரம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

    உத்திரம் 1ம் பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

    சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Kadagam Rasi July Monthly Prediction Sakthi Online – 2023

    கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு  – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  என கிரக நிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    02-07-2023 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    03-07-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    04-07-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  

    15-07-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    23-07-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    ரத்த பாசத்திற்கு அடிமையாகும் கடக ராசியினரே நீங்கள் கொண்ட கடமையில் தவறாதவர், இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

    குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

    பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

    அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

    புனர்பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

    பூசம்:

    இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

    ஆயில்யம்:

    இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Maharam December Monthly Prediction – Sakthi Online

    மகரம்:

    கிரகநிலை:

    ராசியில் சனி – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு  – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய மகர ராசியினரே இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

    கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

    பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

    திருவோணம்:

    இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும்.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

    பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16

    அதிர்ஷ்ட தினங்கள்: 07, 08

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kumbha Rasi December Monthly Prediction – Sakthi Online

    கும்பம்:

    கிரகநிலை:

    ராசியில் சந்திரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் புதன் – விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் கும்ப ராசியினரே இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

    தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

    பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

    மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    சதயம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

    அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10, 11

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Meenam December Monthly Prediction – Sakthi Online

    மீனம்:

    கிரகநிலை:

    ராசியில் குரு  – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சனி – விரைய ஸ்தானத்தில் சந்திரன் – என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மீனராசியினரே, இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

    ரேவதி:

    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

    பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்