டிசம்பர் 31 – பிரதோஷ நாள் ராசிபலன்….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – உதவி
ரிஷபம் – நம்பிக்கை
மிதுனம் – ஆக்கம்
கடகம் – ஊக்கம்
சிம்மம் – நஷ்டம்
கன்னி – கவனம்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – கவலை
மகரம் – துன்பம்
கும்பம் – ஜெயம்
மீனம் – சாந்தம்
சந்திராஷ்டமம் – அசுபதி, பரணி
Tag: Rasipalan
-
December 31 2021 Rasipalan
-
December 30 2021 Rasipalan
டிசம்பர் 30 – ஏகாதசி நாள் ராசிபலன்….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – திடம்
ரிஷபம் – பகை
மிதுனம் – தடை
கடகம் – வரவு
சிம்மம் – அலைச்சல்
கன்னி – பொறுமை
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – சாதனை
தனுசு – பக்தி
மகரம் – ஓய்வு
கும்பம் – நிறைவு
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – ரேவதி, அசுபதி -
December 29 2021 Rasipalan
டிசம்பர் 29 – இன்று இந்த ராசிக்கு லாபமான நாள்….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – வரவு
கடகம் – பாசம்
சிம்மம் – லாபம்
கன்னி – உயர்வு
துலாம் – சலனம்
விருச்சிகம் – கீர்த்தி
தனுசு – பயம்
மகரம் – பரிவு
கும்பம் – சுபம்
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி
-
December 28 2021 Indraya rasipalan
இன்றைய ராசி பலன்
மேஷம் – யோகம்
ரிஷபம் – நலம்
மிதுனம் – நஷ்டம்
கடகம் – லாபம்
சிம்மம் – போட்டி
கன்னி – புகழ்
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – மறதி
தனுசு – ஆதரவு
மகரம் – முயற்சி
கும்பம் – நிம்மதி
மீனம் – உழைப்பு
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி -
December 27 2021 Rasipalan
டிசம்பர் 27 – இன்று இந்த ராசிக்கு பாராட்டு மழை….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – நம்பிக்கை
ரிஷபம் – உழைப்பு
மிதுனம் – நிறைவு
கடகம் – உற்சாகம்
சிம்மம் – நற்சொல்
கன்னி – தெளிவு
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – வாழ்வு
தனுசு – பாசம்
மகரம் – சிரமம்
கும்பம் – யோகம்
மீனம் – உதவி
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி -
December 26 2021 Rasipalan
.இன்றைய ராசி பலன்
மேஷம் – அனுகூலம்
ரிஷபம் – சந்தோஷம்
மிதுனம் – பொறுமை
கடகம் – சோதனை
சிம்மம் – நன்மை
கன்னி – வரவு
துலாம் – செலவு
விருச்சிகம் – முயற்சி
தனுசு – ஓய்வு
மகரம் – சிந்தனை
கும்பம் – சாந்தம்
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
-
December 25 2021 Rasipalan
டிசம்பர் 25 – இன்றைய ராசிபலன்….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – சந்தோஷம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – நேர்மை
கடகம் – ஓய்வு
சிம்மம் – ஈகை
கன்னி – சினம்
துலாம் – தனவிருத்தி
விருச்சிகம் – அலைச்சல்
தனுசு – கவனம்
மகரம் – தோல்வி
கும்பம் – அன்பு
மீனம் – வாழ்வு
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
December 24 2021 Rasipalan
டிசம்பர் 24 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு….
.இன்றைய ராசி பலன்
மேஷம் – களிப்பு
ரிஷபம் – வரவு
மிதுனம் – ஆர்வம்
கடகம் – சாந்தம்
சிம்மம் – செலவு
கன்னி – பாசம்
துலாம் – உறுதி
விருச்சிகம் – உதவி
தனுசு – கீர்த்தி
மகரம் – சலனம்
கும்பம் – லாபம்
மீனம் – கவனம்
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம் -
Kumbha rasikku 2022 year rasipalan
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் குரு – சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது – லாப ஸ்தானத்தில் சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.கிரக மாற்றங்கள்:
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2022 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களே இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வண்டி – வாகனங்கள் – இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது கவனம் தேவை. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதரவு நீடிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணி இட மாற்றம் – பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.
அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும்.சதயம்:
இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த வருடம் பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி – புதன் – சுக்ரன்
எண்கள்: 6, 7, 8சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ” என்ற ம்ந்திரத்தை தினமும் 17 முறை சொல்லவும்.
செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.
மலர் பரிகாரம்: முல்லைப் பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது. -
Viruchiga rasikku 2022 Rasipalan
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – சுக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.கிரக மாற்றங்கள்:
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2022 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வருடம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும்.குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். புது நிறுவனங்கள் தொடங்க ஆவல் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும்.
பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கலைத்துறையினர் வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது,
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.அனுஷம்:
இந்த வருடம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். உங்கள் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.கேட்டை:
இந்த வருடம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் – குரு – சந்திரன்
எண்கள்: 4, 5, 7
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கார்த்திகேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.
செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்களுக்குச் சென்று வரவும்.
மலர் பரிகாரம்: செவ்வரளிப் பூவை முருகனுக்கு அர்பணித்து வரவும்.
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA